லேண்டிங் கியர் பிரச்சினை.. அந்தரத்தில் ஏர் இந்தியா பயணிகள்! புதுக்கோட்டையை வட்டமிட்ட ஏஎக்ஸ்பி 613
திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லேண்டிங் கியர் விமானத்திற்குள் செல்லவில்லை. இதனால் விமானம் மீண்டும் திருச்சியில் தரை இறங்க இருக்கிறது. இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட முறை அந்த விமானம் புதுக்கோட்டையை சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியில் இருந்து துபாய் சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் புறப்பட்டு சென்றது.

சுமார் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான பயணிகள் அந்த விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் வந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு சோதனை முடிவடைந்து திட்டமிட்டபடி விமானம் 5.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.
ரன் வேயிலிருந்து விமானம் புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை எல்லைப் பகுதியை அடைந்தது. ஆனால் தொடர்ந்து பயணிக்காமல், பாரக்குடி. மலப்பட்டி, ஆவூர், முக்கோண மலைப்பட்டி, ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் அந்த விமானம் தொடர்ந்து வட்டமடித்தபடி இருந்தது. வழக்கமாக தஞ்சாவூர் விமானப் படைத்தளத்தில் இருந்து அப்பகுதியில் விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம்.
ஆனால் ஒரே விமானம் தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றி சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 616 விமானம் தான் புதுக்கோட்டை பகுதியில் வட்டமடித்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இது தொடர்பாக திருச்சி விமானத்தில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, துபாய் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் தான் லாண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளே செல்லாததால் வட்டம் அடித்து வருவதாக கூறினர்.

ஆனால் ஒரே விமானம் தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றி சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 616 விமானம் தான் புதுக்கோட்டை பகுதியில் வட்டமடித்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து இது தொடர்பாக திருச்சி விமானத்தில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, துபாய் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் தான் லாண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளே செல்லாததால் வட்டம் அடித்து வருவதாக கூறினர்.
விமானத்தின் ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது. தொடர்ந்து விமானம் தரையிறங்க முடியாததன் காரணமாக வட்டமடித்து வருவதாகவும், விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்த தகவல் கிடைத்ததன் காரணமாக திருச்சி விமான நிலையமே பரபரப்புக்குள்ளாகியது.
தொடர்ந்து விமானத்தை தரை இறக்க திட்டமிட்டுள்ள நிலையில் அங்கு தீயணைப்பு துறை வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளன. சுமார் பத்துக்கும் அதிகமான ஆம்புலன்ஸ்களும் நான்கு தீ அணைப்பு வாகனங்களும் அங்கு தயாராக இருக்கும் நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டது.
அதே நேரத்தில் லேண்டிங் கியர் தரையிறங்கும் போது செயல்படாமல் இருந்தால் தான் பிரச்சனை எனவும் லேண்டிங் தற்போது வெளியே இருக்கும் நிலையில் விமானத்தை தரை இயக்குவது சிரமம் இல்லை என்றனர் அதிகாரிகள். இதற்கிடையே குறிப்பிட்ட அந்த ஏர் இண்டிய விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து அவர்கள் வேறொரு விமானம் மூலம் சார்ஜா செல்லவுள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications