கல்யாண நாளில்.. தூக்கில் தொங்கிய மாப்பிள்ளை.. அதிர்ந்து அலறிய உறவினர்கள்
திருச்சியில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

திருச்சி: கல்யாணத்தன்றே மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
சறுக்குப்பாறையை சேர்ந்தவர் தினேஷ். இவர் லிப்ட் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் நேற்று முன்தினம் மாலை ரிசப்ஷன் நடந்து முடிந்தது. நேற்று திருமணம் என நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அதனால் நேற்று காலை கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டில் எல்லோரும் மண்டபத்துக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது, தூங்கி கொண்டிருந்த மாப்பிள்ளையை எழுப்ப அவரது அம்மா அறைக்கு சென்றார். கதவு நீண்ட நேரமாக தட்டியும் திறக்கவே இல்லை.

மணமகள் குடும்பத்தார்
அதனால் பதட்டமடைந்து ரூமின் ஜன்னல் வழியாக பார்த்தால், மாப்பிள்ளை தூக்கில் தொங்கி கொண்டு இருக்கிறார். இதையடுத்து கதவை உடைத்து, மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். இந்த தகவல் மணமகள் வீட்டுக்கு உடனடியாக சொல்லப்பட்டது.

சாப்பாடு நின்றுவிட்டது
ஆனால் அதற்குள் மண்டபம் நிறைய இரு வீட்டு சொந்தக்காரர்கள், நண்பர்கள் என குவிய தொடங்கி விட்டார்கள். எல்லார் கையிலும் பரிசு பொருட்களுடன் மணமக்களுக்காக காத்திருந்தார்கள். பிறகு எல்லோரும் விஷயம் தெரிந்து சோகமாக திரும்பி சென்றார்கள். தயாராகி கொண்டிருந்த கல்யாண சாப்பாடு அப்படி அப்படியே நின்றுவிட்டது.

பிடிக்கவில்லையா?
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடைபெறுகிறது. மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கா? என விசாரித்து வருகிறார்கள்.

தாழ்வு மனப்பான்மை
ஆனால் மாப்பிள்ளை 10-ம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறாராம். கல்யாண பெண், டிகிரி முடித்திருக்கிறாராம். இதனால்கூட மாப்பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மை இருந்து இப்படி முடிவுக்கு வந்திருப்பாரோ என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications