காரணமே வேற.. செந்தில் பாலாஜி கைது! மத்திய பாஜக அரசின் சதி - பகீர் பின்னணி இதான்.. திருமாவளவன் பரபர
திருச்சி: எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சியை தடுக்க பாரதிய ஜனதா கட்சி சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சி தலைவர்களின் கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பதற்கும், எதிர்க்கட்சிகள் சிதறி போகாமல் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் விதமாக மத்திய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு சதித்திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் விளைவாக தான் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு செந்தில்பாலாஜியை 18 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி கைது செய்துள்ளனர்.

இப்படிப்பட்ட எல்லா அடக்குமுறைகளையும் தாண்டி தமிழக முதல்-அமைச்சர் தற்போது இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் செயல்படுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்.
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு இடையே இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாட்டை உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி தற்போது பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்றொரு இடத்துக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தையும் பிரதமர் மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். யோகா செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். நாட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமரின் அணுகுமுறை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
இது பற்றி கேட்டபோது, அவருடைய குடும்பத்தாரையும் கைது செய்து சித்ரவதை செய்துள்ளனர். தமிழக அரசு இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும். மேலும், இந்த சம்பவத்தில் சித்தூர் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து வருகிற 26 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று அவர் கூறினார்.
அதிமுகவுடனான கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிளித்த திருமாவளவன், கூட்டணியை விட்டு பாஜக விலகியபிறகு பார்ப்போம் என்று அவர் பதில் அளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications