18 வயசு சாந்தா.. காருக்குள் வைத்து கடத்திய பூவரசன்.. பணால் ஆன பிளான்.. மாமியார் வீட்டில் 1-2-3!
திருச்சி: 18 வயது சாந்தாவை இழுத்து பிடித்து காருக்குள் தள்ளி கடத்தி சென்றுள்ளார் பூவசரன் என்பவர்.. கடத்தி சென்றாலும் பழனி முருகன் கோயிலில் வைத்துதான் சாந்தாவுக்கு தாலி கட்ட வேண்டும் என்றும் பிளான் செய்திருந்தார்... ஆனால், கல்யாணம் ஆகாமலேயே மாமியார் வீட்டுக்கு போயுள்ளார் பூவசரன்.
திருச்சி திருவானை காவல் கொண்டையன்பேட்டை வெள்ளாளர் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடேசன்.. இவரது மகள் சாந்தா..18 வயதாகறிது.. அப்பகுதியில் அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார்... பொதுத்தேர்வும் எழுதியிருக்கிறார்..

இந்நிலையில் சாந்தாவின் அத்தை மகள் கோமதி அவரை கடைக்குப் போகலாம் என்று கூப்பிட்டுள்ளார்.. அதன்படி சாந்தாவும் - கோமதியும் கடைக்கு சென்றனர்.. காவேரி பிரிட்ஜ் அருகே சென்றபோது, பூவரசன் நின்று கொண்டிருந்தார்.
பூவரசன் சாந்தாவை ஒருதலையாக காதலித்து வருபவர்.. அத்தை மகனும்கூட... பிரிட்ஜ்-ல் பூவரசன் நிற்பதை பார்த்ததும் சாந்தா அதிர்ந்துவிட்டார்.. அப்போதுதான் கோமதி வேண்டுமென்றே கடைக்கு போகலாம் என்று சொல்லி சாந்தாவை அழைத்து வந்தது தெரியவந்தது.. இதனால் பயந்துபோன சாந்தா, அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.. ஆனால் பூவரசன் தயாராக நின்ற ஒரு காரில் சாந்தாவை பிடித்து உள்ளே தள்ளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதை பற்றி உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.. இதனிடையே சாந்தாவை பூவரசன் பழனி முருகன் கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது . உடனே போலீசார் உறவினர்களுடன் விரைந்து சென்றனர்... ஒட்டன்சத்திரம் ரெட்டியார் சத்திரம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்த அந்த காரை மடக்கினர். காருக்குள் அலறி கொண்டிருந்த சாந்தாவையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், சாந்தாவை கட்டாய கல்யாணம் செய்ய முயன்ற பூவரசன், கோமதி, உறவினர் ஜெயக்கொடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த கடத்தலில் மேலும் 2 பேருக்கு சம்பந்தம் உள்ளதால் அவர்களையும் தேடி போலீசார் வருகிறார்கள்... மாமியார் வீட்டுக்கு சென்றுள்ள மாப்பிள்ளை பூவசரனுக்கு இப்போதுதான் வயது 20 ஆகிறது!!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications