திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்சி: திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
Recommended Video
வியாழக்கிழமை பிற்பகலில் திருச்சி அதன் புறநகா் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இதையடுத்து மாலை 5 மணி முதல் உறையூா், ஸ்ரீரங்கம், முத்தரசநல்லூா், ஜீயபுரம், முக்கொம்பு, திருவானைக்கா, மண்ணச்சநல்லூா், மணிகண்டம், கருமண்டபம், தில்லை நகா், கண்டோன்மென்ட், வயலூா் உள்ளிட்ட மாநகா், மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை 50 நிமிடங்களுக்கு மேலாக பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்தது.

இதனால் மாநகரின் முக்கியச் சாலைகளான கரூா் புறவழிச்சாலை, பாரதிதாசன் சாலை, திருச்சி நாமக்கல் சாலை, பாலக்கரை, தில்லைநகா் பிரதான சாலைகள், மாநகரத் தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் மழையில் நனைந்தவாறே சென்றனா். காவிரி நீா் திருச்சி முக்கொம்பு, கல்லணை ஆற்றுப்படுகை வழியாகக் கரை புரண்டோடி வரும் நிலையில் இந்தக் கனமழையால் காவிரி ஆற்றில் செல்லும் நீரில் அளவு சற்று அதிகரித்தது. வெயிலின் தாக்கமும் குறைந்து மாநகா் புகா் பகுதிகள் குளிா்ந்தன. வெயிலால் அவதியுற்ற பொதுமக்களுக்கு இந்தத் திடீா் மழை மகிழ்ச்சியளித்தது.
நீண்ட காலத்துக்குப் பின்னர் திண்டுக்கல் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை சில மணிநேரம் விட்டு விட்டு நீடித்தது. இது விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications