மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் தேவை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு- அன்பில் மகேஷ்
திருச்சி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது குலக் கல்வி மற்றும் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறது; ஆகையால் புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில கல்வி துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

பங்கேற்பு இல்லை ஏன்?
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலின் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருக்கிறது என்பதைவிட பங்கேற்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில அமைச்சர்களின் கருத்தை கேட்க வேண்டும் என மத்திய அரசுக்க் இ மெயில் மூலம் கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் மத்திய அரசு எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை. அதனால் இன்றைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

குலக் கல்வி திணிப்பு
புதிய கல்வி கொள்கை தொடர்பான திமுகவின் நிலைப்பாடு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குலக் கல்வி திட்டத்தை மறைமுகமாக என்பதைவிட நேரடியாகவே திணிக்கிறது.

மும்மொழிக் கொள்கை திணிப்பு
அதேபோல் இருமொழிக் கொள்கையை ஒழித்து மும்மொழிக் கொள்கையையும் இந்த புதிய கல்விக் கொள்கை திணிக்கிறது. குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும். இடஒதுக்கீடு தொடர்பாக புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடவும் இல்லை.

கல்வி கொள்கை திருத்தம் தேவை
மறைமுகமாக இந்தி, சமஸ்கிருதத்தை புதிய கல்வி கொள்கை மூலம் மத்திய அரசு திணிக்க முயற்சிக்கிறது. புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications