ரியல் எஸ்டேட் துறை அசுர வளர்ச்சி? பத்திரப்பதிவு துறையில் நடந்த அதிரடி மாற்றத்தை கவனிச்சீங்களா?
திருச்சி: தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையில் கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவுத் துறைக்கு அரசு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
திருச்சி, தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று தொடங்கி வைத்தனர்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பத்திரப்பதிவுத் துறையில் கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவுத் துறைக்கு அரசு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இலக்கை அடைய ஏதுவாக, அதிகாரிகள் பணியாற்ற வேண்டியுள்ளது. பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணியாற்ற வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது" என உத்தரவிட்டப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், துணை பதிவுத்துறை தலைவர் ராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சார்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், திருச்சியில் செங்குளம், வரகனேரி, புத்தூர், பாண்டமங்கலம், உய்யக்கொண்டான் திருமலை மற்றும் திருச்சி மாநகராட்சியை உள்ளடக்கிய 12 வார்டுகள் அடங்கும். இதன் மூலம் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில், ஆண்டுக்கு 5 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யவும், இதன் மூலம் அரசுக்கு ரூ. 52 கோடி வருவாய் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்திரங்கள் பதியப்படும்போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காத வண்ணம் உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுத்து வரும் அரசு, கட்டிடங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பத்திரங்களை உடனுக்குடன் முடித்து வருவாய் ஈட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவு துறையில் ஆவணங்களை திருத்துவதை தடுக்கவும் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது . ஆவணங்களை திருத்த முடியாத அளவிற்கு மென்பொருளையும் வடிமைத்துள்ளது. பத்திரப்பதிவு ஆவணங்கள் திருத்த முடியாத ஆவணங்களாக மாற்றப்படுவதால் போலி பத்திரப்பதிவு நடப்பது இயலாத காரியமாகிவிடும்.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறை வழக்கத்தை விட அசுர வளர்ச்சி அடைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைந்து இருந்தால்தான் இந்த அளவிற்கு வருவாய் அதிகரிப்பது சாத்தியம் என்று சொல்கிறார்கள்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications