திருச்சி.. தொடர் மழையால் இடிந்த சுவர்.. 2 வயது சிறுவன் பரிதாப பலி
திருச்சி: தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 2 வயது சிறுவன் பலியான சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருச்சி கே கே நகர் கே. சாத்தனூர், காவல்காரன் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். சென்ட்ரிங் தொழிலாளியான இவருக்கு மனைவியும் ஹரிகிருஷ்ணன் என்ற 2வயது மகனும் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக இவரது கூரை வீட்டின் சுவர் மழைநீரில் ஊறியிருந்தது. இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் அந்த சுவற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த மண் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ஹரி கிருஷ்ணனின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கிய ஹரி கிருஷ்ணனை காப்பாற்ற முயன்றனர்.
ஆயினும் அவர்களின் முயற்சி பலனளிக்காமல் சிறுவன் ஹரிகிருஷ்ணன் சிறிது நேரத்தில், மூச்சுத்திணறி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்து விட்டான். தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications