Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூட்டிய அலுவலக அறை.. திருச்சி ‛பெல்’ பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வந்த சண்முகம் என்பவர் திடீரென்று தனது துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் எஸ்எஸ்டிபி எனும் ஸ்டீல் டியூப் பிரிவில் பொது மேலாளராக பணியாற்றி வந்தவர் சண்முகம். இவருக்கு வயது 50.

trichy bell crime

இந்நிலையில் தான் நேற்று வீட்டில் இருந்து வழக்கம்போல் சண்முகம் பணிக்கு சென்றார். பணி முடிந்தாலும் கூட அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பணி முடிந்தும் சண்முகம் வீட்டுக்கு வரவில்லை என்பது பற்றி குடும்பத்தினர் பெல் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அவரது அலுவலக அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிறுவனத்தினர் கதவை தட்டியும், அவரது பெயரை சொல்லியும் அழைத்தனர். ஆனால் அறைக்கு உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் ஷாக்கான அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் துப்பாக்கியை வைத்து தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மற்றும் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர் வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகம் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி உடனடியாக எந்த விவரமும் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெல் நிறுவனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+