திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீர் மாற்றம்.. காத்திருப்போர் பட்டியலில் வைப்பு
திருச்சி: திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் துரை முருகன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக துரை முருகன் இருந்து வந்தார். இவர் திடீர் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட டாஸ்மாக்கின் புதிய மேலாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பார்த்திபன் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ஆக உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்து உள்ளார். பணி மாறுதல் செய்யப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மாற்று பணியிடம் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்பதால் அவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு காலத்தில் திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ஏராளமான அளவில் திருட்டு போனது. மேலும் சட்டவிரோதமாக விற்பனை நடந்ததாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. இதன் காரணமாகவே மாவட்ட மேலாளர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என டாஸ்மாக் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications