திருச்சி திமுகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்..திருச்சி சிவா வீடு மீது கல் வீசி தாக்குதல்..கார் சேதம்
திருச்சியில் ராஜ்யசபா எம்.பி மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி: திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது திமுகவினர் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவாவின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பபட்டுள்ளன. சிவா வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்படுள்ளது.
திருச்சி திமுகவில் அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள், திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே அவ்வப்போது முட்டல் மோதல் ஏற்படும். கடந்த 15 ஆண்டுகாலமாகவே திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துக்கொண்டு இருக்கிறது.

ஒரே கட்சியில் இருந்த போதும், இருவருக்கும் இடையே மோதல், நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது. சிவாவை நேரு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவ்வப்போது சிவாவின் ஆதரவாளர்கள் நேருவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற ஒரு விழாவில் கே.என். நேரு பங்கேற்றார். சிவா வீட்டிற்கு அருகில் நடைபெற்ற விழாவில் ராஜ்யசபா எம்.பியான சிவாவின் பெயரை போடவில்லை என்றும், அவரை முறையாக அழைக்கவில்லை என்றும் சிவாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இந்த நிலையில் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிவா வீட்டின் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சிவாவின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் திருச்சி சிவா வீடு முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!












Click it and Unblock the Notifications