வீட்டுக்கதவை தட்டி பெண்களை அழைக்கும் அரை நிர்வாண நபர்.. திருச்சி அருகே கொந்தளிக்கும் கிராமம்
Recommended Video

திருச்சி: நள்ளிரவு நேரத்தில் கதவை தட்டி உடல் உறவுக்கு அழைக்கும் குடிகார தொழிலாளிக்கு எதிராக ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லாமேடு அருகே உள்ள கோட்டை பளுவஞ்சி பகுதி பெண்களுக்கு நூதனமான பிரச்சினை.
இதே ஊரை சேர்ந்த சேர்ந்த தொழிலாளியால்தான் அத்தனை தொல்லையும்.

குடிகாரர்
அதே ஊரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குடிபோதையால் நள்ளிரவில் அரை நிர்வாண கோலத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று பெண்களை அழைப்பதாக கூறப்படுகின்றது.

அரை நிர்வாணம்
அரை நிர்வாண கோலத்தில் அழைப்பதை பார்க்கும் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிக் கொள்ளும் சம்பவமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

பேருந்துகள் சிறை பிடிப்பு
இதுகுறித்து கோபமடைந்த ஊர்மக்கள், வளநாடு போலீசில் புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட தொழிலாளி மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் இன்று காலை இரண்டு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்தனர். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
-
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications