திருச்சி வட்டார கல்வி அலுவலர் லதாபேபி.. இப்படியா போய் சிக்கணும்... தேடி வந்த பெரிய சிக்கல்
திருச்சி: திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதாபேபி, கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த ஆசிரியை விமலா பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் இவர் பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு சென்று விட்டார். இதனிடையே ஜூலை மாதத்தில் பணிபுரிந்தமைக்காக ஆசிரியை விமலாவுக்கு 4 நாட்கள் ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனை வாங்க கொடுபடா சான்று கேட்ட ஆசிரியையிடம் 1500 லஞ்சம் வாங்கியதாக வட்டார கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், மின் வாரிய ஊழியர்கள் என அரசு ஊழியர்கள் யார் லஞ்சம் கேட்டாலும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் கையும் களவுமாக பிடிக்க ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்புவார்கள். அதனை வாங்கும் அரசு ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

அத்துடன் சஸ்பெண்ட் செய்யப்படுவார். இது காலம் காலமாக உள்ள நடைமுறை. என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் திரும்ப வேலையில் தொடருவதால், லஞ்சம் குறையவே இல்லை... அதேநேரம் சிக்க வைக்கவும் சிலர் முயற்சிக்கிறார்கள். பழிவாங்கும் ஆயுதமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. எனினும் முறையான சரியான புகார்களை தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுப்பார்கள். திருச்சியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருச்சி நகர வட்டார கல்வி அலுவலராக 54 வயதாகும் லதாபேபி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த ஆசிரியை விமலா (35) பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் இவர் பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு பணிக்கு விட்டார். இதனிடையே ஜூலை மாதத்தில் பணிபுரிந்தமைக்காக ஆசிரியை விமலாவுக்கு 4 நாட்கள் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் ஆசிரியை விமலா 4 நாட்கள் ஊதியம் கொடுக்கப்படாததற்கு சான்று கேட்டு, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதாபேபியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு லதாபேபி, ஊதியம் கொடுக்கப்படாததற்கான சான்று (கொடுபடா சான்று) வழங்க ரூ.1,500 லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத விமலா நேற்று திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.
நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் போலீசார் திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வட்டார கல்வி அலுவலர் லதாபேபி லஞ்சப்பணம் ரூ.1,500-ஐ விமலாவிடம் இருந்து பெற்று வைத்திருந்தபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், அந்த அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications