திருச்சியில் சூப்பர்- 32 பேருக்கு கொரோனா சிகிச்சை நிறைவு- கை தட்டி வழியனுப்பி வைத்தார் ஆட்சியர்!
திருச்சி: திருச்சியில் கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த 32 பேரை அரசு மருத்துவமனையில் இருந்து கை தட்டலுடன் வழி அனுப்பி வைத்தார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு.
திருச்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சியை சேர்ந்த 40 பேருக்கும் கரூர், அரியலூர், பெரம்பலூரைச் சேர்ந்த 3 பேருக்கும் என மொத்தம் 43 பேருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களின் ரத்த பரிசோதனை பெறப்பட்டு 32 பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை 9 மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா ஆகியோர் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தும் கைகளை தட்டியும் விடை கொடுத்தனர். மருத்துவமனை ஊழியர்களும் இதில் பங்கேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளரிடம் கூறியதாவது : திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 29 பேரும், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தற்போது நோய் பாதிப்பு முற்றிலும் சரி செய்யப்பட்டது. இந்த 32 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தற்போது 67 வயது முதியவர் மற்றும்2 வயது குழந்தை உள்ளிட்டோர் நல்ல உடல் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையின் சேவைக்காக நன்றியை தெரிவிக்கிறோம்.. தற்போது அனுப்பி வைக்கப்படும் 32 பேரும் வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தப்படுவார்கள் அதன் பின்னர் மருத்துவ சோதனை செய்து கொண்டு வழக்கமான பணியில் ஈடுபடுவர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
டிஸ்சார்ஜ் ஆன அனைவருக்கும் பழங்கள் மற்றும் அவித்த முட்டை, கொண்ட கடலை உள்ளிட்டவை கொடுத்து அவர் வழியனுப்பினர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications