திருச்சி சர்வதேச விமான நிலையம் மாறுது.. மத்திய அரசு போடும் பெரிய திட்டம்
திருச்சி: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வெளிநாட்டு விமானங்களைக் கையாளும் இரண்டாவது விமான நிலையம் என்றால் அது திருச்சி சர்வதேச விமான நிலையம் தான். என்ன தான் கோவை தொழில் நகரம், மதுரை கலாச்சார நகரம் என்றாலும், வெளிநாட்டில் வேலை செய்யும் மக்கள் அதிகம் இருப்பது காவிரி டெல்டா மாவட்டங்களில் தான். அதனால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். திருச்சி விமான நிலையம் உள்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டாம் நகரங்களில் உள்ள விமான நிலையம் ஆகும். அங்கு உள்நாட்டு சேவைகளை விட வெளிநாட்டு சேவைகளே இங்கு அதிகமாக இயக்கப்படுகிறது. கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாய் போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கு பல்வேறு விமான நிறுவனங்கள் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

திருச்சி விமான நிலையம் 2,423 மீட்டர் நீளமுள்ள ஒரு ரன்வேயைக் கொண்டிருக்கிறது. இங்கு Airbus 300 / 321/ 320 மற்றும் B-737 வகை விமானங்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. திருச்சி விமான நிலையம் கடந்த 2024-25 நிதியாண்டில் 13.98 லட்சத்திற்கும் அதிகமான சர்வதேச பயணிகள் வந்து சென்றுள்ளார்கள். அதேபோல் 2023-24 நிதியாண்டில் 13.05 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்றுள்ளார்கள்..
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ரன்வே கார்டு லைட்ஸ் அண்மையில் தான் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நவீன விளக்குகள், அனைத்து வானிலை நிலைகளிலும், குறிப்பாக பார்வைத் திறன் குறைவாக இருக்கும் போது, விமானங்களின் பாதுகாப்பான இயக்கத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் அண்மையில் தான் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம் வரும் காலத்தில் மிகப்பெரிய விமான நிலையமாக உருவெடுக்கும் என தெரிகிறது. மிகவும் லாபகரமான விமான நிலையமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் பெரிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன. அடுத்தாக இரண்டாம் கட்ட நகரங்களிலும் விமான நிலையங்களை குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், வாரணாசி, புவனேஸ்வரம், அமிர்தசரஸ், ராய்ப்பூர், திருச்சி உள்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதை மத்திய அரசு வேகப்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
திருச்சி உள்ளிட்ட 5 பெரிய விமான நிலையங்களும், திருப்பதி உள்ளிட்ட 6 சிறிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோல் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications