திருச்சி பிரபலம் யார்? கொள்ளிடம் பாலத்தில், அதுவும் சிமென்ட் கட்டையில் பைக்கில்.. திணறிட்டாங்க ஜனம்
திருச்சி: திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஒட்டுமொத்த திருச்சியையும் அலறவிட்ட இந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. ஆனால், கடந்த 2 நாட்களாகவே, திருச்சியை கலங்கடித்தே பிரபலமாகிவிட்டார் இளைஞர்.
தமிழகத்தில் கடந்த 23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது... இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு ஏராளமானோர் திரண்டு வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இளைஞர்கள்: அப்போது இளைஞர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்தனர். திடீரென திருச்சிக்குள் புகுந்ததுடன், இந்த இளைஞர்கள் திருச்சி மக்களுக்கு நிறைய தொந்தரவுகளை தந்துவிட்டார்கள்.. அதிலும், புறநகர் பகுதிகளில் இவர்கள் செய்த அலப்பறைகளை கண்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர் திருச்சி நகர மக்கள்.
இவர்களில் பல இளைஞர்கள் பைக்கில் வந்தார்கள்.. அப்போது, பைக்குகளில் வீலிங் செய்து பொதுமக்களுக்கு பீதியை தந்தார்கள்.. ஒருசில இளைஞர்கள், பஸ்களின் முன்பு தண்டால் எடுப்பது போல பாவ்லா செய்து பீதியை கிளப்பினார்கள்..
டான்ஸ் : மேலும் சில இளைஞர்கள், சாலையை முழுமையாக மறித்துக்கொண்டு டான்ஸ் ஆடினார்கள்..இதனால், கொள்ளிடம் பாலத்தில், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதில் உச்சக்கட்டமாக, இன்னொரு இளைஞர், கொள்ளிடம் பாலத்தின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மேலேயே பைக்கை ஓட்டிச் சென்றார்.. மிகவும் ஆபத்தான இந்த பாதையில், டிவிஎஸ் 50-ஐ சர்ரென்று ஓட்டிச்சென்றார்.. கிட்டத்தட்ட 1.5 கிமீ தூரத்துக்கு இந்த டூவீலரை ஓட்டிச்சென்றார்... அதுவும், சர்க்கஸில் சாகசம் செய்வது போல, பைக்கை ஓட்டி செல்லவும், அந்த பைக்கின் முன்பக்கத்தில் நின்று அவரது இளைஞர்கள் அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்..
வீடியோ: பொதுமக்கள் இதைப்பார்த்து பதறிப்போனார்கள். பின்னர் இந்த காட்சியை வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர். இந்த வீடியோதான், கடந்த 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது.
பலவிதங்களில் தொந்தரவுகளை தந்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இந்த இளைஞர்களை போலீசார் ஏன் கண்டுகொள்ளவில்லை? ஏன் இன்னமும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று இணையவாசிகள் கேள்விகளை கேட்க துவங்கிவிட்டனர்.
இதற்கு பிறகு, அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்த விசாரணையை போலீசார் தற்போது முன்னெடுத்துள்ளனர். அதிலும், கொள்ளிடம் பாலத்தில், சிமெண்ட் கட்டையில் பைக்கை ஓட்டிய அந்த "சாகச" இளைஞரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications