திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் கொள்ளையடித்த முருகன் பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ளது லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை. இந்த கடையில் கடந்த ஆண்டு அதிகாலை இரு கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ரூ 12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

விசாரணையில் இந்த கொள்ளையை திருவாரூரை சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் நடத்தியதாக தெரியவந்தது. 44 வயதான முருகன் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் கொள்ளையடித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானாவில் கொள்ளையடித்த பிறகு முருகன் கடந்த 2015-இல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையிலும் முருகன் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
கொடூர நோயால் பாதிக்கப்பட்டு உடல்மெலிந்து காணப்பட்ட முருகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முருகன் உயிரிழந்தார்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications