எதா இருந்தாலும் சொல்லுடா, எனக்கு நீ வேணும் புள்ள.. திருச்சி மாணவியிடம் வழிந்த முசிறி பேராசிரியர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. அக்கல்லூரியின் தமிழ் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், கல்லூரி மாணவியிடம் முறைகேடான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் கடுமையான அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. இதனால் மாணவிகள் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நாகராஜன்.. இவருக்கு 52 வயதாகிறது.. இவரிடம் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயதான மாற்றுத்திறனாளி மாணவி மற்றும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

Trichy Musiri Government Arts College

அத்துடன் மாணவியிடம் ஆசிரியர் தவறாக பேசியிருந்த ஆடியோவும் வெளியாகியிருந்தது.. இந்த ஆடியோ வைரலானதையடுத்து, கல்லூரி முதல்வர் உத்தரவின் பேரில், கல்லூரி புகார் உள்விசாரணை கமிட்டி மற்றும் மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினார்கள்..

பிறகு, திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரும், சம்பந்தப்பட்ட அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் நாகராஜனிடம் தீவிரமான விசாரணையை நடத்தினார்கள்.. இறுதியில் பேராசிரியர் நாகராஜனை சஸ்பெண்ட் செய்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.

எனினும், பேராசிரியரும், மாணவியும் பேசிய ஆடியோ இணையத்தில் தொடர்ந்து வலம் வந்தவாறே உள்ளது.. அந்த உரையாடல் இதுதான்:

பேராசிரியர் நாகராஜன்: எனக்கு நீ வேணும் புள்ள. எதா இருந்தாலும் இப்ப சொல்லு.

மாணவி : சார் நிறைய பொண்ணுங்க இருக்காங்க. என்னை மட்டும் ஏன் உங்களுக்கு பிடிச்சிருக்கு. அனுமதி இன்றி என்னை தொடக்கூடாது.

பேராசிரியர்: உன்ன எனக்கு பிடிக்கும். அதனால் உன்கிட்ட மட்டும்தான் நான் கேட்க முடியும். என்கூட இருப்பியா? மாட்டியா?... அத மட்டும் சொல்லு.

மாணவி: இருப்பேன்.

பேராசிரியர்: உன்கிட்ட இருக்கிற எல்லா விசயமும் எனக்கு கிடைக்குமா? கிடைக்காதா?...

மாணவி: எல்ல விசயமும்னா.. புரியலை...

பேராசிரியர்: திங்கள் கிழமை நான் அங்க தான் புள்ள இருப்பேன்... நீ இப்ப வந்தீனாக்கூட நான் அங்க தான் இருப்பேன்.. அஞ்சு மணி வரைக்கும். நான் சொல்றத கேளு. டிபார்ட்மெண்ட்ல வந்து யாரும் இருக்க வேணாம்னு சொல்லிட்டு சிஎல்பி போகச்சொல்லிட்டு நான் திரும்ப ரெண்டரை மணிக்கு சிஎல்பில இருந்து டிபார்ட்மெண்டுக்கு வந்துருவேன். நீ யாரு கேட்டாலும் ஹாஸ்டல்ல இருந்து அக்கா வரேன்னு சொல்லியிருக்காங்க... நான் அவங்க கூட போயிருவேன்.. அப்படின்னு சொல்லிட்டு இரு... கரெக்டா நான் உனக்கு போன் பண்றேன்.

மாணவி: எனக்கு பயமா இருக்கு.. எனக்கு தனியாலாம் இருக்க முடியாது.

பேராசிரியர்: இல்லடா... ரெண்டரை மணிக்கு எல்லாரும் போயிருவாங்க.. நான் மட்டும் தான் இருப்பேன். அப்ப நீ வந்து சேரு. சரியா.

மாணவி: எனக்கு பயமா இருக்கு...

பேராசிரியர்: ஆமா... உன் அனுமதியில்லாம உன்ன தொடக்கூடாது... கட்டிப்பிடிக்க கூடாது... முத்தம் கொடுக்க கூடாது எதுவுமே இல்லாம நான் எதுக்கு உனக்கு?..

- என்றெல்லாம் அந்த ஆடியோவில் பதிவாகியிருக்கிறது.. மொத்தம் 9 நிமிடம் 36 செகண்ட் இந்த ஆடியோ பேச்சு உள்ளது.. இதைக்கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஒழுக்கத்தையும், பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் கற்றுக்கொடுக்க வேண்டியவர்களே இப்படியான தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டால், மாணவிகளை காப்பது யார்? பேராசிரியரே இப்படிப்பட்ட அத்துமீறல்களில் ஈடுபடுவதை மன்னிக்கவே முடியாது என்று கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+