கோயம்பேடு, கிளாம்பாக்கத்தையே தூக்கி சாப்பிட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்.. வீடியோ பாருங்க
திருச்சி: திருச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம் நாளை திறக்கப்பட இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த பேருந்து முனையத்தை திறந்து வைக்கிறார்... இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எம்எல்ஏக்கள் சௌந்தர பாண்டியன், தியாகராஜன், ஸ்டாலின் குமார் கதிரவன் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.. இந்நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் டிரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பொதுமக்களுக்கு திகைப்பை தந்து வருகிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 246 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு, இந்த பஸ் ஸ்டாண்டு மிகவும் உதவியாக இருக்கும்.. காரணம், கிளாம்பாக்கம் போலவே, நவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிலையமும் கட்டப்பட்டுள்ளது... கடைகள், உணவகங்கள் ஓட்டல்கள், ஓய்வறைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

நகர பேருந்துகள்
வெளியூர் செல்லும் பேருந்துகள் தரை தளத்தில் இருந்தும், நகரப் பேருந்துகள் முதல் தளத்தில் இருந்தும் இயக்கப்படும். ஒரு நாளைக்கு 3,200 பஸ்களை இந்த பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்க முடியும். இதில் 1,257 நகரப் பஸ்களாகவும், 1,929 வெளியூர் பஸ்களாகவும் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 280 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, விழுப்புரம் மட்டுமல்லாமல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர் போன்ற நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எல்லாம் இந்த புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து இனிமேல் இயக்கப்பட உள்ளன. திருச்சியில் இருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களுமே இனி பஞ்சப்பூர் வரை இயக்கப்படும்.
இந்த பஸ் ஸ்டாண்டு மட்டும் திறக்கப்பட்டுவிட்டால், திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவிகள்
எனவேதான், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் திறப்பு விழாவை அனைவருமே ஆவலுடன் எதிர்நோக்கி வருகிறார்கள்.. வரும் 9ம் தேதி இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக பிரமாண்ட மேடை, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துக்க பக்கத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த திறப்பு விழா முடிந்ததுமே, இதே மேடையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க போகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
512 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிவடைந்த 100 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் 830 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நம்பர் ஒன் டோல்கேட்
எனவே, வருகிற 9-ந்தேதியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தோ அல்லது மத்திய பேருந்து நிலையத்திலிருந்தோ பஸ்கள் புறப்படாது... பெரம்பலூர் மக்கள் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும் என்றால், ஒன்று நம்பர் ஒன் டோல்கேட்டில் இறங்கி பஸ் மாற வேண்டும். அல்லது அவர்கள் பால் பண்ணையில் இறங்கி பஸ் மாற வேண்டி இருக்கும்.
(ரூட்: நம்பர் ஒன் டோல்கேட், பால் பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் பஞ்சப்பூர் பேருந்து நிலையம்) நகர பேருந்துகள் வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தே கிளம்பும். மற்ற அனைத்து பெரிய நகரங்களுக்கும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்துதான் கிளம்பும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
டிரோன் காட்சிகள்
இந்நிலையில், திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் டிரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பொதுமக்களுக்கு திகைப்பை தந்து வருகிறது. பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டு அமைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றிலும் பரந்த விசாலமாக காணப்படுகிறது.. பஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான இடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கடைகள், கழிப்பறைகள் என பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது அந்த காட்சியில் பதிவாகியிருக்கிறது.
கார்கள், இரு சக்கர வாகனங்கள் என தனித்தனியாக நிறுத்தி வைப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பஸ் முனையத்தில் நான்கு முனைகளிலும் பசுமையான புல்வெளிகளையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. மொத்தத்தில் இணையத்தில் பிரம்மாண்டமான காட்சியாக வலம்வந்து கொண்டிருக்கிறது திருச்சியின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்!!












Click it and Unblock the Notifications