ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. திருச்சியில் முப்படை பென்ஷன்தாரர்கள் 30ம் தேதி ஆவணங்களுடன் ரெடியா
திருச்சி: திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர்ப்பு முகாம் நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 8807380165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் அவ்வப்போது ஏற்படுகின்றன.. இந்த குறைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும், ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ராணுவம், கடற்படை, விமானப்படையின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாமில் ஓய்வூதியதாரர்கள் பங்கேற்று தங்களது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
உயிர்ச்சான்று அடையாளம்
அதேபோல, உயிர் சான்று (Life Certificate) அடையாளம் காணுதல்: ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதற்குத் தேவையான உயிர் சான்றைப் புதுப்பித்தல், பெயர் மற்றும் இதர தகவல்களைத் திருத்துதல், ஓய்வூதியத் தொகையில் உள்ள முரண்பாடுகளைச் சரிபார்த்து, சரியான தொகையை பெறுவதற்கான வழிமுறைகளை பெறுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
அந்தவகையில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் IDAS தற்போது மீண்டும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.. அதில் வரும் 30ம் தேதி திருச்சியில் குறைதீர் முகாம் நடக்க போவதாகவும் வெளியிட்டிருக்கிறார்.
அறிவிப்பில் உள்ளதாவது: "முப்படை ( ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண ஓர் மாபெரும் SPARSH ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ பரேடு கிரவுண்டில் ( Army Parade Ground) வரும் 30-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
ஓய்வூதியதாரர்கள்
இந்த முகாமில் உயிர் சான்று அடையாளம் காணுதல், SPARSH ஓய்வூதியத்தில் பெயர் மற்றும் இதர தகவல்களை திருத்துதல், ஓய்வூதிய தொகை திருத்துதல், ஆதார் புதுப்பித்த்தல், OROP குறைகள் நிவர்த்தி செய்தல், பாதுகாப்பு குடும்ப ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு பணிகளுக்காக தனித்தனியே ஸ்டால்கள் அமைக்கப்பட்டு ஓய்வூதிய சேவைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் இந்த முகாமில் அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், பல்வேறு முப்படை ஆவண அலுவலகங்கள் (Record Offices), அனைத்து வங்கிகள் ஆகியவற்றின் அலுவலர்கள் பங்கு பெறவிருக்கின்றனர்.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் செய்தி & ஒளிபரப்பு துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கின்றனர்.
குறைதீர் முகாம்
எனவே தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் 30-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள இம்முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் ஓய்வூதிய குறைகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக திருச்சி மற்றும் அருகாமை மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் இம்முகாமில் பெருந்திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓய்வூதிய ஒப்பளிப்பு
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர் தங்கள் படைபணிச் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் கார்டு, பான கார்டு, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசலுடன் நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை 8807380165 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் ஓய்வூதியதாரர்களுக்கு முகாமில் முன்னுரிமை வழங்கப்படும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications