நகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை!
நகைகளை தந்தே நடிகைகளை வலையில் விழவைத்துள்ளனர்
Recommended Video
திருச்சி: நெக்லஸ்களை தந்தே நடிகைகளை கவிழ்த்துள்ளனர் மாமன் முருகனும், மருமகன் சுரேஷூம்.. இதில் சுரேஷை பெரிய ஆளாக்கி பார்க்க வேண்டும் என்பதுதான் முருகனின் லட்சியமாம்!
லலிதா ஜுவல்லரி கொள்ளை நடந்தபோது, போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி கொண்டிருக்க மணிகண்டன்தான் முதலில் சிக்கினார். ஆனால், மெயின் கொள்ளையன் முருகனும், சுரேஷூம் சிக்கவே இல்லை. காரணம், நம் போலீசாரால் இவர்களை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.
இந்த கடுப்பில்தான் சுரேஷின் குடும்பத்தார்களுக்கு போலீசார் நெருக்கடி தந்துள்ளதாக தெரிகிறது. பெங்களூரில் இருந்த சுரேஷின் மனைவி, மற்றும் சொந்தக்காரர்களுக்கு நெருக்கடி தரவும் தலைமறைவாக இருந்த சுரேஷ் பதறி போய்விட்டான்.

நெருக்கடி
அதனால்தான், வேற வழியில்லாமல் செங்கம் கோர்ட்டில் வந்து சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதே காரணத்தை மையப்படுத்திதான் முருகனும் பெங்களூர் கோர்ட்டில் சரணடைந்தது. ஒருவளை போலீசார் இவர்களின் குடும்பத்தினருக்கு நெருக்கடி தராமல் இருந்திருந்தால், முருகனையும், சுரேஷையும் இதுவரை நம்மால் பிடித்திருக்கவே முடியாதுதான். கொள்ளை சம்பந்தமாக கோர்ட், கேஸ் என்று விசாரணை நடந்து வருகிறது.

புலம்பல்
இந்நிலையில், திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், சுரேஷ் இன்று ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். பிறகு வெளியே வந்த சுரேஷ் "இந்த வழக்கில் என் அம்மா, தம்பிக்கு கொஞ்சமும் இதில் சம்பந்தமே இல்லை.. தேவையில்லாமல் எங்க குடும்பத்துல18 பேரை போலீஸார் கைது செய்து சித்ரவதை செய்றாங்க.. "நீ மட்டும் சரணடைந்துவிடு.. உன் சொந்தக்காரங்களை விட்டுடறோம்"ன்னு சொன்னாங்க. அதை நம்பி சரணடைந்தேன்.. ஏமாந்துட்டேன்.. போலீசார் என்னை ஏமாத்திட்டாங்க.. சொன்னபடி செய்யல" என்று கதறினான்.

உறுதி
இந்த சுரேஷ் மீது முருகனுக்கு தனிப்பட்ட பாசம் இருந்திருக்கிறது. சுரேஷை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்பதில் முருகன் உறுதியாக இருந்திருக்கிறான். சினிமாவில் ஹீரோவாக போட்டது முதல், கொள்ளை அடிப்பது வரை கூடவே வைத்திருந்து இருக்கிறான். நடிகைகளிடம் பேசும்போதுகூட, இருவரும் சேர்ந்துதான் நகைக்கடை வைத்திருக்கிறோம் என்று நகைகளை அள்ளி வீசி உள்ளனர்.. இருவருமே அதே நடிகைகளிடம் ஜாலியாகவும் இருந்துள்ளனர்.

அடையாளம்
ஆனால், ஒருகட்டத்தில், நாம்தான் இப்படி ஆகிவிட்டோம். சுரேஷ் கொள்ளையனாக இருக்க கூடாது என்று முருகன் நினைத்துள்ளான். அதற்காக சுரேஷுக்கு பில்டிங் காண்டிராக்டர், ஹீரோ, பிசினஸ்மேன் என்ற அடையாளத்தை பெற்றுத் தர வேண்டும் கடுமையாக முயற்சி மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications