மலேசியாவிலிருந்து திருச்சி வந்த விமானம்.. விஜயலட்சுமியின் கைப்பையை திறந்த சுங்கத்துறை.. அதிர்ச்சி
திருச்சி: மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பெண்ணின் கைப்பையை திறந்து பார்த்த சுங்கத் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மலேசியாவிலிருந்து சனிக்கிழமை அதிகாலை திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினா் சோதனை மேற்கொண்டபோது, விஜயலட்சுமி என்பவா் கொண்டு வந்த கைப்பையில் அரிய வகை 2 அணில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வந்தனா். மேலும், இது தொடா்பாக, திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலா் எஸ். சதீஷ், மாவட்ட வன அலுவலா் ஜி. கிரண் உத்தரவின்பேரில், திருச்சி வனச்சரக அலுவலா் கோபிநாத் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினா் சென்னை, கடலூா் பகுதிகளில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், விஜயலட்சுமியிடமிருந்து அணில்களை பெறக் காத்திருந்த, சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்த சுல்தான் இப்ராஹிம் ( 29 ), அவா்களுக்கு உடந்தையாக செயல்பட்ட கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த சாகுல்அமீது (28) மற்றும் விஜயலட்சுமி ஆகியோரை வனத்துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பிறகு, 3 பேரையும் திருச்சி 4-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அணில்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை கிண்டி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications