திருச்சி ரெய்டு.. மூட்டையில் ரூ.100 கோடி நிலப் பத்திரங்கள்.. கந்து வட்டி புகாரில் 3 பேர் கைது!
திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, கந்து வட்டி புகாரில் பைனான்ஸியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, பைனான்ஸியர் மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
திருச்சி மாவட்டம், லால்குடி திருவள்ளூர் நகர் பகுதியைச் சேர்ந்த விசுவநாதன் என்பவர், பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த விவசாயியும், லால்குடி நகராட்சியின் 9 வது வார்டு திமுக கவுன்சிலருமான ஆறுமுகம் என்ற செந்தில்குமார் என்பவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, விசுவநாதனிடம் 6 ஏக்கர் விவசாய நிலத்தின் பத்திரங்களை அடமானமாக வைத்து, மூன்று பைசா வட்டிக்கு, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை பெற்றள்ளார்.

பைனான்ஸியர் விசுவநாதன் மிரட்டல்
தற்போது அசலுடன் வட்டியும் சேர்த்து ரூபாய் 2 கோடியே 20 லட்சம் கொடுத்தால் தான் நிலத்தின் பத்திரங்களை கொடுக்க முடியும் என பைனான்ஸியர் விசுவநாதன் மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்( ஐஜி ) சந்தோஷ் குமாரிடம் நேரில் புகார் அளித்தார்.

விசுவநாதன் மீது பலர் புகார்
இதே போல லால்குடி, பெருவெள்ளநல்லூர், வெள்ளனூர், புள்ளம்பாடி, இடையாற்று மங்கலம், ஆங்கரை போன்ற பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , மற்றும்லஏழை எளியோர் என 100-க்கும் மேற்பட்டோர் தங்களது நிலத்தின் பத்திரங்களை அடமானமாக வைத்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளனர். வட்டிக்கு மட்டும் பத்திரம் வழங்குவோம் என மிரட்டியதால், தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு, டிஜிபி அலுவலகம், திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட காவல்துறை ஐஜி உள்ளிட்டோரிடம் பல புகார்களை அளித்துள்ளனர்.

போலீசார் விசாரணை
இதனையடுத்து, லால்குடி நகராட்சி திமுக கவுன்சிலர் ஆறுமுகம் என்ற செந்தில்குமார் கொடுத்த புகாருடன் ஏற்கனவே பாதிக்கப்பட்டோர் அளித்த புகார்களின் அடிப்படையில் திருச்சி மத்திய மண்டல ஐஜி உத்தரவின்படி, திருச்சி மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி குழந்தைலிங்கம் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள், லால்குடி டிஎஸ்பி, திருச்சி மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகியோர் விசாரணை நடத்த களமிறங்கினர்.

விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு
திருச்சி மாவட்ட காவல் துறை ஏடிஎஸ்பி குந்தலிங்கம் தலைமையில் போலீசார், திருவள்ளுவர் நகரில் உள்ள பைனான்ஸ் விஸ்வநாதன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், இரண்டு பைகள் நிறைய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில அடமானத்தின் பத்திரங்கள் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்த நிலப்பத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விஸ்வநாதனுடன் மகன்களும் கைது
மேலும், செந்தில்குமார் புகாரின் பேரில் பைனான்சியர் விஸ்வநாதன், அவரது மகன்கள் விவேக், வினோத் ஆகியோர் மீது லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மேலும், அவரது ஊழியர்கள் 2 பேரை லால்குடி காவல் நிலையத்தில் போலீஸார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடுக்கிடும் தகவல்கள்
பைனான்ஸியர் விசுவநாதன், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பேருந்துகளில் நேர காப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து,வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் சம்பாதித்த பணத்தில், லால்குடி புள்ளம்பாடி பத்திர பதிவு அலுவலகங்களில் எல்லைக்குட்பட்ட பகுதியில், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் விவசாய நிலங்கள் வீட்டு மனைகள் என 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்ட பைனான்ஸியர் விசுவநாதன் குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, தான் லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications