100 சதுர அடி கிடைச்சாலும் விடாதீங்க! இனி பஞ்சப்பூருக்கு தான் டிமாண்ட்! ஒட்டுமொத்த கலரும் மாறிடுச்சு!
திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று டைடல் பார்க் அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின். ஏற்கனவே பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய இருக்கும் நிலையில் டைடல் பார்க்கும் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் களைகட்டி வருகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்றால் அது திருச்சி தான். தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் மையமாக அது இருக்கிறது. திருச்சியை தலைநகராக அறிவிக்க கூட கோரிக்கைகள் எழுந்ததும் உண்டு.

சாலை மார்க்கமாக வந்தாலும் ரயில் மார்க்கமாக வந்தாலும் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முக்கிய புள்ளி தான் திருச்சி. அதன் காரணமாகத்தான் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல முக்கிய தொழில் நிறுவனங்கள் திருச்சியில் ஆரம்பிக்கப்பட்டன.
மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை, பெல் நிறுவனம், என்ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பலவும் திருச்சியில் அமைந்திருப்பதை கவனிக்க வேண்டும். திருச்சியில் தற்போது நெரிசல் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஸ்ரீரங்கம், சமயபுரம், லால்குடி உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பேருந்து மாறி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதை அடுத்து பஞ்சப்பூரில் கிளாம்பாக்கத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து பஞ்சப்பூர் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மட்டுமல்லாது சோலார் திட்டங்கள், சரக்கு வாகன நிறுத்த முனையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த பாய்ச்சலாக தற்போது திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. அதுவும் பஞ்சபூரில் தான் அமைய இருக்கிறது. ஏற்கனவே தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மினி டைடல் பார்க் இருக்கும் நிலையில் தற்போது திருச்சி, மதுரையில் 600 கோடி ரூபாய் செலவில் இன்று டைடல் பார்க் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து பஞ்சபூரில் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கின்றன.
சுமார் 10,000 பேர் பணியாற்றும் வகையில் இந்த டைட்டில் பார்க் அமைய இருக்கிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த டைடல் பார்க் அமையப்படுகிறது. பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகே இந்த டைடல் பார்க் அமைய இருக்கும் நிலையில் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
அதே நேரத்தில் பஞ்சபூர் தற்போது முக்கியத்துவம் பெற்ற பகுதியாக மாறி இருக்கிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் டைடல் பார்க் அமைய இருப்பதால் அப்பகுதியில் உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் அதிகமாக பெருகி வருகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு முன்னணி கட்டுமான நிறுவனங்களும் அங்கு ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்திருக்கின்றன.
பல முன்னணி நிறுவனங்கள் தற்போது பிளாட் போட்டு மனைகளை விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே அங்கு இடம் வைத்திருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டைடல் பார்க்கும் பேருந்து நிலையமும் அமைய இருப்பதால் அங்கு வீட்டு மனைகளின் விலை விண்ணைத் தொட்டு வருகிறது. அதே நேரத்தில் வரும் நாட்களில் இன்னும் விலை அதிகரிக்கலாம் என்கின்றனர் திருச்சி வாசிகள்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications