நந்தவனத்தில் உல்லாசம்.. திருச்சி மண்ணச்சநல்லூர் பெருமாள் கோயிலில் பெண்ணுடன் அவரா? கல்யாணம் ஆகலயாம்
திருச்சி: கோயில்களில் வக்கிர செயல்கள் நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதுபோன்ற செயல்கள் கோவிலுக்குள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோளும் பக்தர்கள் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? திருச்சி திருவெள்ளறை பெருமாள் கோயிலுக்குள் என்ன நடந்தது? யாரிந்த சூப்பர்வைசர்?
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ளது திருவெள்ளறை.. இங்கு பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் அமைந்துள்ளது திருவெள்ளறை புண்டரிகாஷ பெருமாள் கோயில். இந்த பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 4வது திருத்தலம் என்ற பெருமையை பெற்றது. ஆயிரம் வருடத்திற்கு மேல் பழமை வாய்ந்த கோயில் என்பதால் ஏராளமானோர் இந்த கோயிலுக்கு வந்து செல்வார்கள்.
கோயில் நந்தவனம்
அதுமட்டுமல்ல இந்த கோயிலுக்கு சொந்தமாக நந்தவனமும் இங்கு பிரத்யேமாக உள்ளது. 1300 வருடங்கள் பழமையான இந்த கோயிலில் திருமங்கையாழ்வார்யால் மங்கள சாசனம் செய்து 24 பாசுரங்கள் பாடியிருக்கிறாராம்,. இங்குதான் சஷ்டி கிணறு அற்புதமான கட்டிட அமைப்பு உள்ளதாம்.
இத்தனை பெருமையும், அருமையும் கொண்ட கோயிலில்தான் சுரேஷ் என்பவர் அசிங்கம் செய்துவிட்டதாக புகார் கிளம்பியிருக்கிறது, இக்கோயிலில் சூப்பர்வைஸாக மேற்பார்வையாளராக இருப்பவர் சுரேஷ்.. இவருக்கு 54 வயதாகிறது.
சம்பவத்தன்று இந்த கோயிலுக்கு வந்த பெண்ணுடன், அங்கிருந்த நந்தவனத்தில் உல்லாசமாக இருந்துள்ளார் சுரேஷ்.. இது வீடியோவாகவும் வெளிவந்துவிட்டது, இதனை பார்த்த பக்தர்களும், இணையவாசிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்து முகம் சுளித்துவிட்டனர்.
சூப்பர்வைசர் உல்லாசம்
கோயிலுக்கென்று ஒரு மதிப்பு உள்ளது.,.. ஆனால் இதுபோன்ற நபர்களால் அந்த புனிதம் கெட்டு விட்டது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து திருவெள்ளறை கோயில் சூப்பர்வைசைர் சுரேஷ் சொல்லும்போது, 'நான் 2016ல் இந்த கோயிலில் வேலைக்கு சேர்ந்தேன். இதுவரை என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. எனக்கு இப்போது 54 வயதாகிறது. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த பெண்ணிடம் இப்படி தப்பாக நடந்து கொண்டேன். இதுபோன்று இதுவரை நடந்ததில்லை. அதற்காக வருந்துகிறேன். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் இருக்கும் என்று கூறி மனம் வருந்தியிருக்கிறார்,
வீடியோ ஆதாரம் உண்மை
இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சொன்னபோது, '15 நாட்களுக்கு முன்பு இந்த புகார் எனக்கு வந்தது. புகார் வந்ததுமே விசாரணையை நடத்தினேன்.. வீடியோ ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடந்தது.. விசாரணையில் சுரேஷ் மீது தவறு உறுதி செய்யப்பட்டால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். தற்போது விசாரணை முடிந்து, அவரை என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பணிமாற்றம் செய்துள்ளேன்' என்றார்.
எனினும் பக்தர்கள் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. கடந்த வாரம்கூட, தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் ஒரு அசிங்கம் நடந்தது.. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலின் இணைக்கோயிலான இங்கு, அர்ச்சகராக உள்ளவர் 75 வயது விஸ்வநாதர்..
கும்பகோணம் கோயில் அர்ச்சகர்
கடந்த மாதம் 8ம் தேதி பாபநாசம் மெலட்டூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தன்னுடைய குடும்பத்துடன் இந்த கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது, உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக சிறுமி தனியாக சென்றிருக்கிறார். அப்போது அர்ச்சகர் விஸ்வநாதர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தன்னுடைய வக்கிர புத்தியை காட்டியிருக்கிறார்.
உடனே சிறுமி கதறி அழுதபடியே வெளியே ஓடிவந்து தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததை சொல்லி உள்ளார், இதைக்கேட்டு பதறிய பெற்றோர் பதறிப்போய், கோயில் நிர்வாகத்திடமும், கும்பகோணம் மகளிர் போலீசிலும் புகார் தந்தனர். இறுதியில் போலீசார், 75 வயதான அர்ச்சகர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்
எனினும், கோயில்களில் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பக்தர்கள் தரப்பிலிருந்து குமுறல்கள் வெடிக்க துவங்கி உள்ளது. இது போன்ற சம்பவம் கோவிலுக்குள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோளும் விடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications