எஸ்ஆர்எம் ஹோட்டல்.. லீஸ் மேட்டரில் திருப்பம்.. தமிழக அரசுக்கு பின்னடைவு.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
திருச்சி: திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரத்தில், தமிழக அரசின் சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்ஆர்எம் குழுமம் சார்பில் ஹோட்டல் நடத்த கடந்த 1996ல் 30 வருட குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது..

ஆனால், குத்தகை பணத்தை ஓட்டல் நிறுவனத்தினர் முறையாக வழங்காமல் ரூ.38.85 கோடி பாக்கிதொகை நிலுவையில் இருந்தது. இந்தநிலையில் ஓட்டலின் குத்தகை காலம் கடந்த 13.6.2024 உடன் முடிவடைந்தது..
நிராகரிப்பு: இதனிடையே, குத்தகை காலத்தை மேலும் 20 ஆண்டுக்கு நீட்டிக்க கோரி ஹோட்டல் நிர்வாகம் சார்பில் 13.4.2024-ல் மனு அளிக்கப்பட்டது.. அந்த மனுவை நிராகரித்து தமிழக சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலாளர் கடந்த 12.6.2024-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து குத்தகை காலத்தை நீட்டிக்க உத்தரவிடக்கோரி ஹோட்டல் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது, காலம் முடிவடைந்த நிலையில், குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து செய்யவேண்டும் என்றும், குத்தகை காலத்தை நீட்டிக்க கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன்.
2 வழக்குகள்: இந்த 2 வழக்குகளும்தான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சொல்லும்போது, "குத்தகை காலம் முடிந்த நிலையில் அந்த இடத்துக்கு ஹோட்டல் நிர்வாகம் உரிமை கோர முடியாது. இனிமேல் அந்த ஹோட்டலை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடத்தும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி உத்தரவு: இதையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "இந்த வழக்கில் மனுதாரரிடம் ஆலோசனை நடத்தாமல் குத்தகை கால நீட்டிப்பு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையேற்க முடியாது என்பதால், குத்தகை கால நீட்டிப்பு விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலாளருக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. அவர் மனுதாரரை அழைத்து பேசி, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து தகுதி மற்றும் சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications