Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எல்லாப் பய சட்டையையும் கழட்டலைன்னா நான் வக்கீல் இல்ல".. பெண் புகார் பற்றி திருச்சி சூர்யா ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : பெண் ஒருவர், தங்கள் சொத்தை அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யா மீது புகார் கொடுத்துள்ள நிலையில், திருச்சி சூர்யா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திருச்சியை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் தனக்குச் சொந்தமான பள்ளி கட்டிடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளார் சூர்யா சிவா. தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்து, அத்தனை பேரின் யூனிஃபார்மையும் கழற்றுவேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

பள்ளி கட்டிடம் வாடகை

பள்ளி கட்டிடம் வாடகை

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வசித்து வரும் ஆர்த்தி என்ற பெண், தனக்குச் சொந்தமான பள்ளி கட்டிடம் மற்றும் வீட்டை பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யாவின் மனைவி அத்தினா சூர்யாவிடம் கடந்த 2019ஆம் ஆண்டு மூன்று வருட கால வாடகைக்கு வழங்கி ஒப்பந்தம் போட்டுள்ளார். கடந்த மே மாதத்துடன் பள்ளி நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததோடு அவர்களோடு போட்டிருந்த வாடகை ஒப்பந்தமும் முடிவடைந்தது. இதனால் ஆர்த்தி, அத்தினா சூர்யாவிடம் கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

 சூர்யா சிவா கொலை மிரட்டல்?

சூர்யா சிவா கொலை மிரட்டல்?

ஆனால் அவர்கள் காலி செய்ய மறுப்பு தெரிவித்து, 6 மாத வாடகையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். திருச்சி சூர்யா, பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் பொறுப்பு வகிப்பதை காரணம் காட்டி, பள்ளி கட்டிடத்தையும் வீட்டையும் காலி செய்ய முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆர்த்தி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியையும் வீட்டையும் மேலும் 5 வருட வாடகைக்கு எழுதித் தருமாறும், நான் பெரிய ரௌடி, உன்னை இல்லாமல் ஆக்கிடுவேன் என்றும் சூர்யா சிவா கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

திருச்சி சூர்யா பிரஸ் மீட்

திருச்சி சூர்யா பிரஸ் மீட்

ஏற்கனவே சூர்யா சிவா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் ஓரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் திருச்சி சூர்யா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தன் மீதான இந்த புகார், ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் காரணமாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நான் பயப்பட மாட்டேன்

நான் பயப்பட மாட்டேன்

அப்போது பேசிய அவர், "ஆர்த்தி என்பவர் நான் அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும், அவரது சொத்தை அபகரிக்க முயல்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இப்போது என்னை கைது செய்வதற்கு காவல்துறை தயாராக உள்ளது. இன்னும் 1 மணி நேரத்தில் என்னை கைது செய்துவிடுவார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படத் தயாராக இல்லை. காவல்துறை ஆளுங்கட்சியின் கூலிப்படை போல செயல்பட்டு வருகிறது.

திருச்சியில் பாஜக வளர்கிறது

திருச்சியில் பாஜக வளர்கிறது

ஒரு பெண் புகார் சொன்னாலே உண்மையாக இருக்கும் என்ற அர்த்தம் இல்லை. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது. என் வளர்ச்சி, திருச்சியில் பாஜகவின் வளர்ச்சியை பிடிக்காமல், ஆளுங்கட்சியில் இருந்து உள்நோக்கத்தோடு இதனைச் செய்கிறார்கள். ஒரு சொத்து உங்கள் பெயரில் இருந்து, அதனை நான் வந்து வசித்துவிட்டு, காலி பண்ணமுடியாது எனச் சொன்னால் தான் அது நில அபகரிப்பில் வரும்.

தூண்டுதல் காரணமாக

தூண்டுதல் காரணமாக

ஆர்த்தி, தனது பள்ளியை எங்களிடம் விற்றதாக, பணத்தை வாங்கிக்கொண்டு, பிறகு எங்கள் பெயரில் மாற்றித் தருவதாக அரசில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் எங்கள் கையில் இருக்கிறது. பின்னர் இடத்தை தராததால் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளோம். தூண்டுதல் காரணமாக என் மீது பொய்யாக புகார் கொடுத்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவை மீறி என்னை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர். நான் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தேன் என என்ன ஆதாரம் இருக்கிறது?

யூனிஃபார்மை கழட்டுவேன்

யூனிஃபார்மை கழட்டுவேன்

என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வேன். நானும் வக்கீல் தான். எல்லாப் பய சட்டையையும் கழட்டலைன்னா நான் வக்கீல் இல்ல.. என் கவுனை கழட்டிவிட்டுச் சென்றுவிடுகிறேன். நீதிமன்ற உத்தரவு இருக்கும்போது, நில அபகரிப்பு என புகார் அளித்திருப்பதை ஏற்றுக்கொண்டு, என் மீது வழக்குப் பதிவு செய்த அத்தனை அதிகாரிகளின் மீதும் வழக்கு தொடர்வேன்.

காத்துக்கிட்டு இருக்கேன்

காத்துக்கிட்டு இருக்கேன்

அதிகபட்சம் என்னை கைது செய்து ஜெயிலில் அடைப்பீர்கள். நீங்கள் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். பண்ணுங்க.. என்ன பண்றீங்கனு நானும் பார்க்கிறேன். காத்துக்கிட்டு இருக்கேன். உங்களால் முடிந்ததை செய்துகொள்ளுங்கள்." எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+