அண்ணாமலையால் பாஜகவிற்கு வந்தேன்.. ஆனால் சுயமரியாதை முக்கியம்.. திருச்சி சூர்யா சிவா கொடுத்த பதில்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவிற்கு வந்தேன்.. என் மேல் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை என திருச்சி சூர்யா சிவா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவா நேற்று அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Annamalai Surya Siva Trichy

இது தொடர்பாக தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்," தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ்.சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என சாய்சுரேஷ் குமரேசன் கூறியிருந்தார்.

கடந்த 2022ம் ஆண்டும் திருச்சி சூர்யா சிவா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது நடந்தது என்ன பிரச்சனை என்றால், தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவுத் தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகியது. அதில் இருவரும் மிகவும் ஆபாசமாக பேசிக் கொண்டனர். இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் பாஜக மாநில தலைமை விசாரணை நடத்தும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இருவரிடமும் பாஜக மாநில தலைமை அப்போது விசாரணை நடத்தியது. இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அக்கா, தம்பி என பாசமாக பேட்டி அளித்தனர். எனினும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி திருச்சி சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார்.

இதனிடையே சிலமாதங்கள் கழித்து அண்ணாமலை உத்தரவின் பேரில் திருச்சி சூர்யா சிவா பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தமிழக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா மீண்டும் பதவியில் தொடர்ந்தார்..

இந்நிலையில் திருச்சி சூர்யா சிவா, அண்மையில் சாட்டை துரைமுருகன் மற்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும திருச்சி சூர்யா சிவாவிற்கு கடும் பதிலடி கொடுத்தார்கள். திருச்சி சூர்யா சிவாவை பொறுத்தவரை அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். அண்மையில் தமிழிசை சௌந்திரராஜன் பாஜக மாநில தலைமையை விமர்சித்தார்.

அதற்கு பதில் அளித்து திருச்சி சூர்யா சிவா பேசுகையில். தமிழிசை சௌந்தர்ராஜன் நீங்கள் மாநில தலைவராக இருந்தபோது ஒருவர் கூட கட்சியில் இணையவில்லை , நீங்கள் சொல்வது போல் பாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலையை தாக்கி பேசும் திமுகவை நீங்கள் எதுவும் சொல்லாததால் நீங்கள் திமுக ஆதரவாளர் ஒன்று தோன்றுகிறது என கூறி இருந்தார். இது நேற்று நடைபெற்ற பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்தே கட்சியில் இருந்து திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் தான் பாஜகவில் நீக்கப்பட்டது குறித்து திருச்சி சூர்யா சிவா ட்விட்டரில் ரியாக்சன் காட்டியுள்ளார். தனது பதிவில் அவர் கூறுகையில், அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+