டாப் கியர் போட்டு .. அடுத்தடுத்த வேலையில் குதித்த தினகரன்.. சூறாவளி பிரசாரத்தில் மும்முரம்
திருச்சியில் 3 நாள் சுற்றுப்பயணத்தில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video

திருச்சி: டாப் கியர் போட்டு அடுத்தடுத்த வேலையில் இறங்கி விட்டார் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!!
ஆர்.கே.நகர் வெற்றிக்கு பிறகு எதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் தோல்வியேதான் தினகரகனுக்கு வாய்த்து வருகிறது.
அரசியல்வாதிகளிலேயே மிஸ்டர் கூல் என்று பெயரெடுத்த தினகரன், ஒவ்வொரு தோல்வியை கண்டும் துவண்டு சோர்ந்து விடாமல் அனைத்தையும் கடந்து வருகிறார்.

யாருடன் கூட்டணி
வரப்போகிற எம்பி தேர்தலில் யாருடனும் தினகரன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிக்கவில்லை. யாருடன் கூட்டணி வைக்கவும் விரும்பவில்லை போல தெரிகிறது. அதனால் தனித்து நிற்கலாம் என்றும், முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

குறிப்பிட்ட தொகுதிகள்
அப்படியே தனித்து நின்றாலும் எல்லா தொகுதிகளிலும் மல்லுக்கட்டி கொண்டு இருப்பதைவிட, எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தேர்தல் கணிப்பு
அதற்காக சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் சர்வே நடத்தி, 11 தொகுதிகளை தேர்வு செய்து தந்ததாகவும், அதில் பெரும்பாலும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களே இடம் பெற்றிருந்தன என்றும் தகவல்கள் தெரிவித்தன.

திருச்சியில் முகாம்
இந்நிலையில், 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார் டிடிவி தினகரன். இரண்டாம் தலைநகர் என்று சொல்லக்கூடிய திருச்சியிலேயே பெரும்பாலான அரசியல்வாதிகளை போலவே தினகரனும் களம் காண ஆரம்பித்துள்ளார். இன்று முதல் 4-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார்.

3 நாள் பயணம்
இதற்காக நேற்றிரவே தினகரன் திருச்சிக்கு வந்துவிட்டார். இன்று மாலை 4 மணிக்கு இந்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகிறது. ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரன் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்களை நடத்தபோய்தான், அந்த தொகுதிகளில் அமமுக செல்வாக்கு ஓரளவு எட்டிப்பிடித்தது. இப்போது திருச்சியிலும் மக்களை நேரடியாக சந்திக்க புறப்பட்டு விட்டார், அமமுக தொண்டர்கள் குஷியாகி உள்ளனர்.

அடுத்தடுத்த வேலைகள்
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ரத்து, 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு, செந்தில் பாலாஜியின் கட்சி தாவல், அமமுகவுக்குள் புகைந்து வரும் உள்கட்சி பூசல் என எத்தனையோ குடைச்சல்கள் வரிசை கட்டி வந்து சென்றாலும், அவை அத்தனையையும் தட்டி தூக்கி எறிந்து விட்டு அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிடுவதுதான் தினரகனின் கெத்தே!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications