மின்கோபுரத்தில் தொங்கிய உடல்.. திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் பலி
திருச்சி: திருச்சியில் உயர் மின்கோபுர பராமரிப்பு பணி செய்தபோது திடீரென்று மின்சாரம் பாய்ந்ததில் 2 ஒப்பந்த ஊழியர்கள் பலியாகினர். இதில் ஒருவரின் உடல் மின்கோபுரத்தில் தொங்கியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் கலாமணி மற்றும் மாணிக்கம். இவர்கள் 2 பேரும் கேகே நகர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தனர்.

கேகேநகர் ஓலையூர் ரிங்க் ரோடு அருகே உயர் மின்கோபுரம் உள்ளது. இங்கு இன்று பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் சென்றனர்.
பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகே கலாமணி, மாணிக்கம் ஆகியோர் பணியை தொடங்கி உள்னர். கலாமணி மின்கோபுரத்தின் மீது ஏறினார். மாணிக்கம் மின்கோபுரத்தில் கீழே நின்ற கலாமணிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்கோபுரத்தின் வயரில் மின்சாரம் பாய்ந்தது. கண்இமைக்கும் நொடியில் மின்சாரம் கலாமணியின் உடலில் பாய்ந்தது. மேலும் தீப்பிழம்பு ஏற்பட்ட நிலையில் கலாமணி மின்கோபுரத்திலேயே இறந்தார். அவரது உடல் மின்கோபுரத்தில் தொங்கியது.
அதேபோல் மின்கோபுரத்தின் கீழே நின்று கலாமணிக்கு உதவிய மாணிக்கம் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவரும் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் பலியானார்.
இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வாகனத்தின் ஏணியை பயன்படுத்தி 40 அடி உயரத்தில் தொங்கிய கலாமணியின் உடலை கைப்பற்றினர். கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோரின் உடல்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதில் மாணிக்கத்துக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் தான் ஆகிறது. மனைவி மற்றும் பெற்றோர்கள் உள்ளனர். குழந்தை இல்லை.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த பணியாளர்கள் இறந்தாலும் கூட மின்வாரிய அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. அதோடு பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்ட பிறகு தான் இருவரும் பராமரிப்பு பணியை தொடங்கிய நிலையில் எப்படி இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தனர்? என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications