அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானுக்கு கோல்டன் விசா- முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானுக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு கவுரவம் அளித்தது. அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தவைவருமான எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழத்து தெரிவித்தனர்.

சிறந்த முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோரை பெருமைப்படுத்தும் நோக்கில் துபாய் அரசு சார்பில் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகாலம் செல்லுபடியாகக் கூடிய இந்த விசாவை கொடுப்பதற்கு முன்னர், அந்த விசாவை பெறுவதற்கான தகுதிகள் உரிய நபருக்கு உள்ளதா என்பது நன்கு ஆராயப்படும்.

UAE DMK organizer SS Meeran gets Golden Visa and meet CM MK Stalin

அந்த வகையில் நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரை பூர்வீகமாக கொண்ட அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான், ஐக்கிய அமீரக திமுக அமைப்பாளராக உள்ள நிலையில் அவருக்கு துபாய் அரசின் உயரிய கவுரவமான கோல்டன் விசா துபாய் குடியுரிமை அதிகாரி எஸ்.எஸ். மீரானிடம் வழங்கினார். இந்த விசாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்ற எஸ்.எஸ்.மீரான், தமிழக விமான நிலையங்களில் நடத்தப்படும் ஆர்.டி.பிசிஆர் சோதனைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

UAE DMK organizer SS Meeran gets Golden Visa and meet CM MK Stalin

மேலும், இதேபோல் தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆர்.டி.பிசிஆர் சோதனை முடிவு சான்றிதழில் பாஸ்போர்ட் எண் மற்றும் QR Code வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்தார். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் மற்றும் தாயகம் திரும்பும் தொழிலாளர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்ற விவரத்தையும் எஸ்.எஸ்.மீரான் முதலமைச்சரிடம் எடுத்துக்கூறினார்.

இதனிடையே வெளிநாடு வாழ் தமிழர்கள் மீது கழக அரசுக்கு அக்கறை இருப்பதாகவும் இது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானிடம் உறுதியளித்தார். அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானுக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு கவுரவம் அளித்ததை தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+