வேளாங்கண்ணி மாதா திருவிழா! மும்பையிலிருந்து சிறப்பு ரயில்கள்! எப்போது முதல் இயக்கப்படுகிறது?
திருச்சி : வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அது போல் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சரியான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மும்பையின் பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி இடையே திருவிழா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (09093) வரும் ஆக. 27, செப். 6 ஆகிய தேதிகளில் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து இரவு 9.20-க்குப் புறப்பட்டு மூன்றாவது நாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணி - பாந்த்ரா டொ்மினஸ் சிறப்பு ரயிலானது (09094) வரும் ஆக. 29, செப். 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் பிற்பகல் 3 மணிக்கு பாந்த்ரா டொ்மினஸுக்குச் சென்றடையும்.
மும்பையின் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து 22 பெட்டிகளுடன் பயணப்படும் இந்த ரயிலானது புனே, ரேனிகுண்டா, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, மைசூா் - காரைக்குடி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06295) வரும் 14, 17 ஆகிய தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 12.45 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, காரைக்குடி - மைசூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06296) வரும் 15, 18 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மைசூருக்கு 16, 19 ஆம் தேதிகளில் காலை 9.10 மணிக்கு சென்றடையும். மைசூரிலிருந்து 19 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது மண்டியா, மாடூா், ராமநகரம், கெங்கேரி, பெங்களூா், பெங்களூா் கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு வந்தடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மாதா திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 8ஆம் தேதி மங்களகரமான நாளாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதிக்கு முதல் முதலாக போர்ச்சுக மாலுமிகள் வந்து தேவாலயத்தை கட்டினர். வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி கோயில் திருவிழா தொடங்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications