விஜய் எங்கள் சமுதாயம் தான்.. பெருமையாய் விட்டுக்கொடுத்த வெள்ளாளர் முன்னேற்ற கழகம்.. கொடியால் சிக்கல்
திருச்சி: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கொடி தற்போது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த கொடி வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் கொடியை போல் உள்ளதாக கூறப்படும் நிலையில் ‛‛எங்களின் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்பதில் எங்களுக்கு பெருமை. அவரை நாங்கள் வரவேற்கிறோம். கொடியினால் எந்தவித மோதல்களும் எங்களுக்குள் இல்லை'' என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் திருச்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி தனது கட்சியின் பெயர் ‛தமிழக வெற்றிக் கழகம்' என்று அறிவித்தார். அதன்பிறகு கட்சிக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து வந்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கையும் ஆன்லைன் மூலம் தீவிரமாக நடைபெற்றது.

இதையடுத்து கடந்த 19 ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்தார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜய்யின் கட்சி கொடி பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது கொடியின் மேல்புறத்தில் சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழ்புறத்தில் சிவப்பு உள்ளது. இதில் நடுவில் உள்ள மஞ்சள் நிறத்தில் இரண்டு யானைகளும், வாகை மலரும், வாகை மலரை சுற்றி சிறிய நட்சத்திரங்களும் ரவுண்ட்டாக இடம் பெற்றுள்ளது. வாகை மலர் பழங்கால தமிழர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. போரில் வெற்றி பெற்றவர்கள் சூடும் வாகை மலரை விஜய் தனது கொடியில் வைத்துள்ளதாக விஜய் தரப்பு கூறுகிறது.
தவெக கொடியில் இருப்பது வாகை மலரே இல்லையாம்.. தூங்குமூஞ்சி வாகையாம்.. நெட்டிசன்கள் காரசார விவாதம்
ஆனால் மற்றொரு தரப்போ அது வாகை மலர் அல்ல. தூங்குமூஞ்சி வாகை மலர் என கூறிவருகின்றனர். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி யானை சின்னம் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க கொடி ஸ்பெயின் நாட்டு கொடியை போல இருப்பதாகவும் கேரளா அரசின் சின்னத்தில் இருப்பது போல இரண்டு யானைகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல் தமிழகத்தில் செயல்படும் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் கொடியை அப்படியே காப்பி செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தொடர்ந்து வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு..விஜய் கொடி கலர் எங்களோடது! சீனுக்குள் வந்த வெள்ளாளர் முன்னேற்ற கழகம்
நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அதில் கொடி சர்ச்சை ஓடிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக வெள்ளாளர் முன்னேற்றக கழகத்தின் கொடியை அப்படியே போட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் போய் கொண்டே உள்ளது. எங்களின் கொடியில் மேல்புறம் சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே சிவப்பு இருக்கும். நடுவில் புலி அடையாளம் இருக்கும். அதேபோல் கொடியில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் என்பதை பதிவு செய்திருப்போம். எங்களின் சங்கம் பதிவு செய்யப்பட்டது. கொடியும் பதிவு செய்யப்பட்டது தான்.
வெள்ளாளர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வெள்ளாளர் உள்பிரிவையும் உள்ளடக்கிய அமைப்பு இது. வெள்ளாளர் சமுதாயத்துக்கும், வெள்ளாளர் சமுதாய அமைப்புக்கும் விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆனால் வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவரது குடும்பத்தில் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் உச்ச நடிகராக இருக்கிறார்.
அத்துனை சமுதாயத்துக்கும் விஜய் பொதுவானர். அத்துனை மதம், சாதிகளை கடந்து அவர் பொதுவான ஆளாக இருப்பதால் தான் இன்று உச்ச நடிகராக இருக்கிறார். தற்போது அவர் கட்சியும் ஆரம்பித்து இருக்கிறார். எங்களின் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்பதில் எங்களுக்கு பெருமை. அவரை நாங்கள் வரவேற்கிறோம். கட்சி ஆரம்பித்து இருக்கிறார் என்பதற்காக வரவேற்கிறோமே தவிர பொதுதளத்தில் எங்களுக்கும், அவருக்கும் கொடியினால் எந்தவித மோதல்களும், எங்களின் கொடியை பார்த்து அப்படியே அவர்களின் கொடியை தயாரித்துள்ளனர் என்பதோ கிடையாது.
ஏனென்றால் விஜய் அறிமுகம் செய்த கொடியில் வாகை பூ, யானை எல்லாம் உள்ளது. கலரை பொறுத்தவரை கொஞ்சம் தான் கலர் உள்ளது. எல்லா நிறத்திலும் கொடி வைத்துள்ளனர். இதனால் விஜய் இப்படியான கொடியை உருவாக்கி இருக்கலாம். விஜய்யின் நோக்கம் நிறைவேற வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்பும், நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்'' என்றார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன்












Click it and Unblock the Notifications