மொதல்ல சாப்பாடு போடுய்யா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் விவசாயிகள் சொன்னதைக் கேட்டு பதறி பரபரத்த விஷால்!
திருச்சி: திருச்சியில் நடைபெற்று வரும் 'விஷால் 34' படப்பிடிப்பின்போது தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சாப்பிட்டீங்களா எனக் கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதால் பதறிப்போய், உடனே சாப்பாடு போடச் சொன்னார் நடிகர் விஷால்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷாலின் 34வது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

திருச்சி பகுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. தனது படங்களின் படப்பிடிப்பில் எப்போதும் கடைநிலை ஊழியர் தொடங்கி பெரிய நட்சத்திரங்கள் உட்பட அனைவருக்கும் ஒரே மாதிரி உணவு வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உறுதியாக கடைபிடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஷால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்பகுதி மக்களையும், விவசாயிகளையும் சந்தித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஷாலை சந்தித்தனர். அப்போது விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்தும் கேட்டறிந்தார் விஷால்.

அப்போது அவர்களுடன் வந்திருந்த பெண் ஒருவரை பார்த்து விஷால் சாப்பிட்டிங்களாமா? என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் இல்லை என்று பதிலளித்தார். இதைக் கேட்டு பதறிப்போன விஷால், "ஏன் சாப்டல?" எனக் கேட்க, அதற்கு அந்தப் பெண் உங்களைப் பார்த்துவிட்டு சாப்பிடலாம் என்றார்.
“முதல்ல சாப்பாடு போடுங்க”
— Vignesh Selvaraj (@Cs_Vignesh) November 15, 2023
தன்னை சந்திக்க விவசாயிகள் சாப்பிடாததை அறிந்து டென்ஷன் ஆன விஷால்#Vishal #Cinema #Shooting #Farmers pic.twitter.com/Zwfme39hbS
அதற்குள் அருகில் இருந்த உதவியாளர் ஒருவர், "சாப்பாடு வாங்க போனாங்கணே.." எனச் சொல்ல, அவரைப் பார்த்து "முதல்ல சாப்பாடு போடுங்க" என்று காட்டமாக கூறினார் விஷால். முதலில் சாப்பிட்டுட்டு வாங்க எனக் கூறி அவர்களை சாப்பிட அனுப்பினார் விஷால். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது தீயாகப் பரவி வருகிறது.
அண்மையில், தீபாவளி பண்டிகை அன்றும் விஷால் 34 படத்தின் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைப்பெற்று வந்த நிலையில், இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நடிகர் விஷால் சார்பில் சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. உணவு அருந்தும் முன்னர் நடிகர் விஷால் மூன்று மதக் கடவுளையும் பிரார்த்தனை செய்து அதன் பின்னரே சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
எஸ்ஜே சூர்யாவின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. ஒருவர் உயிரிழப்பு, 3 பேர் காயம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications