10 ஆண்டுகளில் ரூ.120 லட்சம் கோடி! தமிழ்நாட்டுக்கு வரலாறு காணாத நிதி.. லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி
திருச்சி: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ. 120 லட்சம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும், இது இதற்கு முந்தைய 10 ஆண்டுகளை விட இரண்டரை மடங்கு அதிகம் என்றும் திருச்சியில் பிரதமர் மோடி பேசினார். மேலும் வரலாறு காணாத நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது என்று பேசினார்.
2024 ஆம் ஆண்டின் முதல் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்தார். திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து சாலை மார்க்கமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினர் மோடி மோடி.. என கோஷம் எழுப்பியபடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 1528 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் புதிதாக ரூ. 1202 கோடியில் கட்டப்பட்டுள்ள 2வது முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து 20 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
எனது தமிழ் குடும்பமே: இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே என தனது உரையை தொடங்கினார். ஒவ்வொரு முறை பேச ஆரம்பிக்கும் போதும் பிரதமர் மோடி, தமிழில் எனது தமிழ் குடும்பமே என்று பேசினார். பிரதமர் மோடி பேசியதாவது:- எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 2024-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது.
ரூ. 120 லட்சம் கோடி: இன்று தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்தனர். 2023-ல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. தமிழகத்திற்கு வரும்போது ஒரு புதிய சக்தி கிடைக்கிறது.
மத்திய அரசு வரலாறு காணாத நிதியை தமிழ்நாட்டுக்கு செலவு செய்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு முன் மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி தான் அளித்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ. 120 லட்சம் கோடியை தமிழகத்திற்கு அளித்து இருக்கிறோம். இது இதற்கு முந்தைய 10 ஆண்டுகளை விட இரண்டரை மடங்கிற்கும் அதிகம் ஆகும். தமிழக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 3 மடங்கு அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
3 மடங்கு வளர்ச்சி: இதேபோல் தமிழக ரயில்வே துறைக்கு மட்டும் முன்பை விட இரண்டரை மடங்கு அதிகம் அளித்துள்ளோம். இதேபோன்று தமிழக மக்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள், மருத்துவ வசதி என அனைத்தும் கிடைக்கிறது. தமிழக மக்களுக்கு வீடுகள், கழிப்பறைகள், குடிநீர்- எரிவாயு இணைப்புகளையும் மத்திய அரசு கொடுத்து வருகிறது.
10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப் பெரிய முதலீடு. உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது. மேக் இன் இந்தியாவின் அடையாளமாக தமிழ்நாடு மாறுகிறது. மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை. 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டில் 400 முறை பயணம். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தால் 3 மடங்கு வளர்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications