Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குமட்டும் ஆபாசம்".. தங்கச்சி முறையாம்.. சொந்த மச்சானை கூட நினைச்சு பார்க்கலயே.. திகைத்த திருச்சி

கள்ள உறவு வைத்திருந்த நபரை அரிவாளால் வெட்டி உள்ளார் உறவினர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தங்கை முறை என்று தெரிந்தும்கூட, கள்ள உறவு வைத்திருக்கிறார் ஒருவர்.. கடைசியில் நடுரோட்டில் அரிவாளால் வெட்டும் அளவுக்கு விவகாரம் சென்றுவிட்டது.

திருச்சி தேவதானத்தை சேர்ந்தவர் சந்துரு.. 43 வயதாகிறது.. இவர் ஒரு பெயிண்ட்டர்.. லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார்.

சந்துருவின் மச்சான் சிவக்குமார்.. திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர்.. இவருக்கு 45 வயதாகிறது.. சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.

 விஜயலட்சுமி

விஜயலட்சுமி

20 வருடங்களுக்கு முன்பு, சந்துருவின் தங்கை விஜயலட்சுமியை சிவக்குமார், காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இது ஒரு கலப்பு மணம் ஆகும்.. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருந்தார்... கடந்த, 2 வருடத்துக்கு முன்பு விஜயலட்சுமி இறந்துவிட்டார்.. மேலும் அவரது மகளும் உடம்பு சரியில்லாமல் இறந்துவிட்டதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், மச்சான் மனைவி அதாவது சந்துருவின் மனைவியுடன் சிவக்குமார் தவறான உறவு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 மச்சான் - தங்கை

மச்சான் - தங்கை

மச்சான் மனைவி என்பது தங்கை முறையாகும்.. இது தெரிந்தும் சந்துருவின் மனைவி சத்யாவுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்து சந்துரு கொந்தளித்துள்ளார்.. மனைவியை கண்டித்தார்.. மச்சானை கண்டித்தார்.. இருவருமே அவர் பேச்சை கேட்கவில்லை.. ஒருகட்டத்தில் எரிச்சல் அடைந்த சத்யா, மகனை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே, நேராக சிவக்குமார் வீட்டுக்கே போய்விட்டாராம்.. அங்கே குடும்பமும் நடத்த ஆரம்பித்து விட்டார்.

 திருவானைக்காவல்

திருவானைக்காவல்

இதற்கு மேல் பொறுக்க முடியாமல் சந்துரு, உச்சக்கட்ட ஆத்திரமடைந்தார்.. இன்று காலை ஒரு பெரிய சைஸ் அரிவாளை எடுத்து கொண்டு ஆவேசமாக வந்தார்.. திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிவக்குமாரை, ஓட ஓட வெட்டினார்.. இந்த கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ள, சிவக்குமார் உயிரை கையில் பிடித்து கொண்டு நடுரோட்டிலேயே ஓடினார்.. ஆனாலும் சந்துரு விடவில்லை..

 ராஜாமணி

ராஜாமணி


அப்போது அந்த வழியாக, கான்ஸ்டபிள் ராஜாமணி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. இதை பார்த்ததும், விரட்டி சென்று சந்துருவை அரிவாளுடன் மடக்கி பிடித்தார்... அதற்குள் சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் சுருண்டு காயமடைந்து விழுந்தார்.. அவரை ஏட்டு ராஜாமணி, மீட்டு கொண்டு போய், ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சேர்த்தார்... தீவிர சிகிச்சை நடந்து வருகறிது.. ஆனாலும் சிவக்குமார் சீரியஸாக இருக்கிறாராம்.. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயங்கரம்

பயங்கரம்

இப்படி ஒரு பயங்கரம் இன்று காலை 9.30 மணிக்கு, அதுவும் பிஸியான நடுரோட்டில் பொதுமக்கள் கண் முன்னாடியே நடந்துள்ளது.. அரிவாள் வெட்டினை நேரில் பார்த்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. வாகனங்களில் வந்து கொண்டிருந்தவர்கள், அதற்கு மேல் வண்டிகளை ஓட்ட முடியாமல் பதைபதைத்து நின்றுவிட்டார்கள்.. ராஜாமணி மட்டும் அங்கு சரியான நேரத்தில் வரவில்லையானால், இந்நேரம் சிவக்குமார் உயிருடனே இருந்திருக்க மாட்டார்.. இந்த சம்பவத்தினால், திருச்சி பகுதியில் நீண்ட நேரத்துக்கு டென்ஷன் காணப்பட்டது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+