"தலைகள் சிதறும்".. திருச்சியில் சர்ருனு வந்த பட்டாக்கத்தி.. யாருப்பா அது? எஸ்பிக்கே மிரட்டல் விடறது?
திருச்சி: நாளுக்கு நாள் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வரும்நிலையில், அது தொடர்பான அத்துமீறல்களும் பெருகி வருகின்றன. அந்தவகையில், தூத்துக்குடி, திருச்சியில் "ரீல்ஸ்" பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது?
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 52 வயதான பாஸ்கர்.. இவரது பக்கத்து வீட்டுக்காரர் பாலசுப்பிரமணியன்.. இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இதையடுத்து, பாலசுப்பிரமணியம் மீது புகார் தருவதற்காக, தூத்துக்குடி கலெக்டர் ஆபீசுக்கு வந்தார் பாஸ்கர்.. திடீரென தின்னர் என்று சொல்லக்கூடிய திரவத்தை உடலில் தேய்த்து தற்கொலைக்கு முயன்றார்.. உடனே அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் பாஸ்கரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது பாஸ்கரன் சொன்னதை கேட்டு அதிர்ந்தே போனார்கள்.
புகார் மனு: அதாவது, கலெக்டரிடம் புகார் மனு கொடுப்பதற்காக பாஸ்கர் புறப்பட்டபோது, யூடியூப் சேனல் நடத்திவரும் 30 வயது விக்னேஸ்வரன் என்பவர் பாஸ்கரை தடுத்தி நிறுத்தியிருக்கிறார்.
"இப்படியெல்லாம் வெறும் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க.. உங்க உடம்பில் தீயை வைத்துக்கொள்வது போல செய்யுங்கள்.. அப்போது நான் அதை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பரப்பிவிடுகிறேன்.. அப்போதுதான் உங்களுக்கும் நியாயம் கிடைக்கும்" என்று பாஸ்கரிடம் சொன்னாராம். தான் நடத்தி வரும் யூடியூப் சேனலின் அதிக லைக் பெரும் ஆதாயத்திற்காக இப்படியொரு ஐடியா தந்த விக்னஸ்வரனை சிப்காட் போலீசார் கைது செய்துள்ளனர்.
லைக்ஸ்: இதுபோலவே, லைக்ஸ்களை அள்ளுவதற்காக இன்னொரு அட்டகாசம் திருச்சியில் நடந்துள்ளது.. திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை.. இவருக்கு இன்னொரு பெயர் துரைசாமி.. இவருக்கு இன்னொரு பெயர் எம்ஜிஆர்நகர் துரை..
இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தைலமரக் காட்டில் கடந்த 11ம் தேதி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.. இது துரையின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.. அதனால், சில தினங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் தளத்தில், "mgr-nagar-official" என்று ஐடி-யிலிருந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருந்தனர்.
தலைகள் சிதறும்: அதில், திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் போட்டோவை போட்டு, "திருச்சியில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும்" என்று பதிவிட்டிருந்தனர்.. இந்த ரீல்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தினார்கள்.. அப்போதுதான், திருச்சி புத்தூர் எம்.ஜி.ஆர்.நகரைச் சோ்ந்த ராஜபாண்டி என்ற 21 வயது நபர், இப்படியொரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ராஜபாண்டியை கைது செய்ய முயன்றனர்.. அப்போதுதான் அவர், குழுமணி உறையூர் சாலையில் ராமநாதநல்லூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
பரபரப்பு: இதனால் போலீஸார் அங்கு விரைந்து சென்று, ராஜபாண்டியை பிடிக்க சென்றார்கள்.. அப்போது, திடீரென பட்டாகத்தியை உருவி, போலீசாரிடம் காட்டி மிரட்டியிருக்கிறார் ராஜபாண்டி... ஆனாலும் போலீசார் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ஜெயிலிலும் அடைத்திருக்கிறார்கள்.. இனிமேல்தான் ராஜபாண்டியிடம் விசாரணை நடத்துவார்கள்..!!
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications