திணறிய திருச்சி! திமுகவை கடுமையாக தாக்கிவிட்டு.. பாஜகவை பற்றி ஒரு வார்த்தை பேசாத எடப்பாடி.. ஏன்?
திருச்சி: திருச்சியில் நடந்த அதிமுக பிரச்சார தொடக்க விழாவில் திமுகவை கடுமையாக தாக்கி பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை சீண்டாமல் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை நேற்று திருச்சியில் தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

நேற்று விழாவில் பேசிய எடப்பாடி, சிறுபான்மை மக்கள் யாருக்காவது பிரச்சனை வந்தால் உங்களுக்கு பக்கபலமாக உறுதுணையாக இருப்போம்.இதை ஓட்டுகளுக்காக சொல்லவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க - தி.மு.கவுக்கு தான் போட்டி.
தமிழகத்தில் ஒரு மருத்துவக்கல்லூரியை ஸ்டாலினால் கொண்டு வர முடிந்ததா? எப்போ பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொண்டு இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட வேண்டும் என்று நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.
உங்களுக்கு தில்லு, தெம்பு, திராணி இல்லை.. கேட்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்.. அதற்காகத்தான் மக்கள் உங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கே வாய்மூடி மவுனமாக இருந்துவிட்டு... இங்கே வந்து செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள். உண்மையாகவே எய்ம்ஸ் விரைவாக கட்ட வேண்டும் என்று அக்கறை இருந்தால் நாடாளுமன்றத்தில்தான் குரல் கொடுத்து இருக்க வேண்டும், என்று கடுமையாக தாக்கி பேசினார்.
ஆனால், திமுக என்ன செய்தது. செங்கல்லை ரோட்டில் காட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை . நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். விளம்பரத்திற்காக செங்கல்லை தூக்கி காட்டுகிறார்கள். 38 எம்பிக்கள் உங்களுக்கு கிடைத்தது. இந்த செங்கல்லை கொண்டு போய் நாடாளுமன்றத்தில் காட்டி நீதியை பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி இருக்கலாம்.
பாஜகவை சீண்டவில்லை; திருச்சியில் நடந்த அதிமுக பிரச்சார தொடக்க விழாவில் திமுகவை கடுமையாக தாக்கி பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை சீண்டாமல் பேசியது சர்ச்சையாகி உள்ளது. எய்ம்ஸ் பற்றி விமர்சனம் செய்த எடப்பாடி பாஜகவை விமர்சனம் செய்யவே இல்லை.
மற்றபடி தேர்தல் பத்திரம் தொடங்கி சிஏஏ வரை எதிலும் பாஜகவை பற்றி பேசாமல் எடப்பாடி பழனிசாமி திமுகவை மட்டுமே தாக்கினார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும் கூட, பாஜகவை தாக்காமல் மென்மையாக செல்லும் போக்கை எடப்பாடி பழனிசாமி கடைப்பிடித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர்கள்: தமிழ்நாட்டில் 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். நேற்று இவர்கள் எல்லோரும் மொத்தமாக எடப்பாடி உடன் மேடையில் ஏற்றப்பட்டனர்.
1.வடசென்னை - ராயபுரம் மனோ
2.தென்சென்னை - ஜெயவர்த்தன்
3.காஞ்சிபுரம் - ராஜசேகர்
4.அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
6.ஆரணி - கஜேந்திரன்
7.விழுப்புரம் - பாக்யராஜ்
8.சேலம் - விக்னேஷ்
9.நாமக்கல் - தமிழ்மணி
10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11.கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
12.சிதம்பரம் - சந்திரஹாசன்
13.நாகை - சுர்ஜித் சங்கர்
14.மதுரை - சரவணன்
15.தேனி - நாராயணசாமி
16.ராமநாதபுரம் - ஜெயபெருமாள
17.கோவை - சிங்கை ராமச்சந்திரன்
18.பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
19.திருச்சி - கருப்பையா
20.பெரம்பலூர் - சந்திரமோகன்
21.மயிலாடுதுறை - பாபு
22.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
23.தருமபுரி - அசோகன்
24.திருப்பூர் - அருணாசலம்
25.நீலகிரி - லோகேஷ்
26.வேலூர் - பசுபதி
27.திருவண்ணாமலை - கலியபெருமாள்
28.கள்ளக்குறிச்சி - குமரகுரு
29.சிவகங்கை - சேவியர் தாஸ்
30.நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
31.புதுச்சேரி - தமிழ்வேந்தன்
32.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
33.கன்னியாகுமரி - பசிலியா நசரேத்












Click it and Unblock the Notifications