திருவாரூர் இடைத் தேர்தலுக்கு தனி பார்முலா வச்சிருக்கேன்: தினகரன் தடாலடி பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருவாரூர் இடைத்தேர்தலில் சப்ளித்தனம் செய்யமாட்டோம் எனவும் தனி பார்முலா வைத்துள்ளதாகவும் அதன் மூலம் பணம்கொடுப்பவர்களை முக்காடிட்டு ஓடசெய்வோம், என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்தார்.

தஞ்சையில தனது கட்சி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் களமிறங்கியுள்ளார்.

Will follow a special formula in Thiruvarur: TTV Dinakaran

ஆர்.கே.நகரில் அதிமுக தான் பணப்பட்டுவாடாவில் ஈடுப்பட்டது. திமுக பணப்பட்டுவாடாவில் ஈடுப்படவில்லை என்று அரசியலுக்காக திமுக வேண்டுமானால் பொய்சொல்வார்கள். நான் சப்ளித்தனம் செய்யமாட்டேன், திருவாரூர் இடைத்தேர்தலில் பணப்படுவாடாவை தேர்தலை ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும். ஆனால் 303 வாக்குசாவடிகளிலும் தனி பார்முலா வைத்து உள்ளேன். பணம்கொடுப்பவர்கள் அதிகாரிகளிடம் மாட்டிகொள்வார்கள். முக்காடுபோட்டுக் கொண்டு ஓடவைப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது தினகரன், 20 ரூபாய் டோக்கன் கொடுத்தாக புகார் எழுந்து இன்றுவரை அது தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+