திருச்சியில் பரவும் மர்ம காய்ச்சல்.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Young girl dies of mysterious fever spreading in Trichy

இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி வயது 38 மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்து உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 113 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+