"மாட்டேன்.. அவன்தான் எனக்கு வேணும்".. பெற்ற குழந்தைகளை தவிக்க விட்ட பெண்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்!
கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்ணுடன் போலீசார் சமரசம் பேசி வருகின்றனர்
திருச்சி: "மாட்டேன்.. அவன்தான் எனக்கு வேணும்.." என்று பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுட்டு இளம்தாய் ஒருவர் கள்ளக்காதலனை கல்யாணம் செய்து கொண்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல்.. 44 வயதாகிறது.. இவரது மனைவி ஆஷா.. 2013-ல் கல்யாணமாகிவிட்டது.. ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
திருச்சியில் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில் ஆஷா வேலை பார்த்து வருகிறார்.. அவருக்கு குமரவேல் என்பவர் அறிமுகமானார்.. அவர் இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை பார்த்து வருபவர்.

இதனிடையே வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படவும், அங்கு சென்று குமரவேல் ஆஷாவை பார்த்துவிட்டு வருவார்.. உடனே கள்ளக்காதலும் அரும்பிவிட்டது.. இருவரும் கல்யாணமும் செய்து கொண்டனர்.. இத்தனைக்கும் அபிஷேக் கல்யாணமானவர்.. மனைவியை பிரிந்து வாழ்வதால், ஆஷாவை ஈஸியாக கல்யாணம் செய்து கொண்டார்.
ஆனால், இந்த கள்ளக்காதல் ஜோடி கல்யாணம் செய்து கொண்டது ஆஷாவின் புருஷன் குமரவேலுக்கு தெரியாது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி வேலைக்கு போன ஆஷாவை காணவில்லை.. இதனால் பதறிப்போன குமரவேல் மனைவியை காணோம் என்று போலீசில் புகார் தரவும், போலீசாரும் ஆஷாவை தேட ஆரம்பித்தனர். அப்போதுதான் அபிஷேக் ஆஷாவை கல்யாணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதில் மனைவி உயிருடன் இருக்கும்போதே அபிஷேக்கும், கணவனிடம் விவாகரத்து பெறாமலேயே ஆஷாவும் இந்த கல்யாணத்தை செய்து கொண்டுள்ளனர். மனைவியை மீட்டுத்தர கோரி குமரவேல் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடக்கிறாராம்.. ஆனால் அபிஷேக் ஒரு போலீஸ்காரரின் மகனாம்.. அதனாலேயே இந்த விவகாரத்தில் போலீசார் சற்று மெத்தனமாக இருப்பதாகவும் குமரவேல் குற்றஞ்சாட்டுகிறார்
இன்னொரு பக்கம் ஆஷாவை சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு குமரவேல் கூப்பிட்டும் வரவில்லையாம்.. "என்னைவிட அவருக்கு வயசு அதிகம்.. வயசை மறைச்சிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார். எனக்கு அபிஷேக்தான் முக்கியம்.. அவனுடன்தான் வாழுவேன்.. குழந்தைகளை கொண்டு வந்து என்னிடம் தந்துவிட்டு போகட்டும்.. அல்லது கோர்ட்டுக்கு போய் குழந்தைகளை பெற்று கொள்கிறேன்" என்று கறாராக சொல்லிவிட்டாராம் ஆஷா!
பெண் பிள்ளைகளின் ஒப்புதலை பெறாமல், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தராமல் கல்யாணம் செய்து வைப்பது இனியாவது குறைய வேண்டும்!
-
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications