கல்யாணம் வேணாமாம்.. தனி அறையில் .. தலையில் சுட்டுக் கொண்டு.. அதிர வைத்த தற்கொலை!
துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
திருச்சி: சசிகுமாருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. தன் ரூமில்.. தன் தலையில்.. தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்துவிட்டார்! திருச்சி ஏர்போர்ட் அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ளது சந்தோஷ் நகர்.. இங்கு வசித்து வரும் நல்லதம்பி என்பவரது மகன் சசிகுமார்.. இவருக்கு 31 வயதாகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

தனது வீட்டருகே "பான் சூட்டிங் கேப் அகடமி" நடத்தி வருகிறார்.. அதாவது துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு சசிகுமார் டிரெயினிங் தந்து வந்துள்ளார். ,இதற்கான முறைப்படி அனுமதியும் பெற்றிருக்கிறார்.. பிரத்யேகமான துப்பாக்கிகளையும் அவர் வாங்கி வைத்திருந்தார்.
அப்பா நல்லதம்பி இறந்துவிடவும், தன் அம்மா ரெஜினாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணி இருக்கும்.. திடீரென வீட்டிற்குள் துப்பாக்கி சத்தம் கேட்டதும் எல்லாரும் அலறிவிட்டனர்.. ஓடிப்போய் சசிகுமார் ரூமில் பார்த்தால், தலையில் சுடப்பட்ட நிலையில் கிடந்தார்.. நெற்றிப்பொட்டில் துப்பாக்கி தெறித்து ரத்தம் கொட்டி கொண்டிருந்தது..

அதனால் அவரை உடனடியாக மீட்டு திருச்சி ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றபோதும், காப்பாற்ற முடியவில்லை.. உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்பேரில் ஏர்போர்ட் போலீசார் விரைந்து வந்து சசிகுமார் உடலை மீட்டனர்.. இது சம்பந்தமான விசாரணையிலும் இறங்கி உள்ளனர். சசிகுமார் எதற்காக சுட்டுக் கொண்டு இறந்தார் என்று உறுதியாக தெரியவில்லை.
ஆனால் கொஞ்ச நாளாகவே சசிகுமார் மன உளைச்சலில் இருந்தாராம்.. இவருக்கு கல்யாணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்து வந்தனர்.. இதற்கு சசிகுமார் மறுப்பு சொல்லி வந்துள்ளார்.. இதனால் பலமுறை வீட்டில் பெற்றொருடன் சண்டைகூட வந்ததாம்.. இன்றைக்கும் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துவிட்டுதான், டிரெயினிங் அறைக்கு சென்றிருக்கிறார்.
அதன்பிறகுதான் தனி அறையில்.. கதவை உள் பக்கமாக பூட்டி கொண்டு, தான் வைத்திருந்த துப்பாக்கியால்.. தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. திருச்சியை அதிர வைத்துள்ள சசிகுமார் தற்கொலைக்கான உண்மை காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications