குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா.. சாமியாடிய இருவர் திடீர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சாமியாடிய இருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். உலக பிரசித்திப் பெற்ற திருவிழா என்பதால் இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

2 were died in Kulasekarapatnam Dasara festival, Tuticorin District

பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடைபெற்றது.

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும். இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர்.

இன்று தொடங்கிய இந்த விழாவில் சிலர் சாமியாடினர். அப்போது சாமியாடிய பெருமாள் என்பவரும், ஜெயக்குமாரும் (34) நெஞ்சுவலியால் மரணமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+