ஆடு மேய்க்கும் போது கூட போலீஸ்.. துத்துக்குடி விவசாயிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு! என்ன காரணம்?
தூத்துக்குடி: வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் மணல் மாபியாக்களால் படுகொலை செய்யப்பட்ட முறப்பநாடு பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் விவசாயி பாலகிருஷ்ணனின் அகரம் கிராமம் உள்ளது. இவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே சூசைபாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ், கடந்த செவ்வாய்க்கிழமை தனது அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதும் இது தொடர்பாக லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணியில் இருந்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக நேற்று முன்தினம் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (40), மாரிமுத்து (32) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மணல் கடத்தலுக்கு எதிராக துணிச்சலாக செயல்பட்டு வந்த அரசு அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ்க்கு ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு எதிராக புகார் கொடுத்த விவசாயி ஒருவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த விவசாயி ஆடு மேய்த்து கொண்டு இருக்கிறார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எப்படி கிடைத்தது என்ற விவரங்களை பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயியான இவர் ஆடு மாடுகளையும் வளர்த்து வருகிறார். அகரம் கிராம ஊராட்சியில் உறுப்பினராகவும் இருக்கும் விவசாயி பாலகிருஷ்ணன் கடந்த 2019 ஆம் ஆண்டு முறப்ப நாடு போலீஸ் ஸ்டேஷனில், தாமிரபரணி ஆற்றின் கரைப் பகுதியில் மணல் கொள்ளை நடப்பதாகவும் ஆனால் இது குறித்து நடவடிக்கை இல்லை என்று புகார் அளித்தார்.
இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல்களும் அதிகளவில் வந்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் , விவசாயி பாலகிருஷ்ணனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டனர். அப்போதில் இருந்து பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறதாம்.
பாலகிருஷ்ணன் ஆடு மேய்க்க சென்றால் கூட அவருக்கு பாதுகாப்பாக ஒரு போலீஸ் கூடவே இருக்கிறார். இந்த விவகாரம் தெரியாத வெளியூர் வாசிகள், போலீஸ் பாதுகாப்புடன் ஆடு மேய்ப்பதை வியப்புடன் பார்ப்பதோடு தங்களுக்கு தெரிந்தவர்களிடம் காரணத்தை கேட்டு தெரிந்து கொள்கிறார்களாம்.
போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பது குறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறும் போது , "இந்த பகுதியில் இளைஞர்களே அதிகம் மணல் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளும் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் போலீசாரும் வருவாய்த்துறையினரும் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை.
ஒரு யூனிட் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மணல் கொள்ளை குறித்து புகார் கூறினால் கூட ஜாமீனில் விடும் அளவிற்கு சிறிய வழக்கு மட்டுமே பதிவு செய்து விட்டு விட்டு விடுகின்றனர். காவலர்களும் லஞ்சம் பெற்று இப்படி செய்கின்றனர். விவசாய வேலை, ஆடு, மாடு மேய்ப்பது என எப்போதும் காவலர் கூடவே இருக்கிறார்" என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications