தூத்துக்குடியில் லிப்ட் கொடுத்த பாவத்திற்கு! இளைஞருக்கு சரமாரி அடி, உதை, அரைஞாண் கொடி கூட மிஞ்சலை!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் லிப்ட் கொடுத்த பாவத்திற்காக இரு சக்கர வாகன ஓட்டியை 6 இளைஞர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி அரைஞாண் கொடி உள்பட அனைத்தையும் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்துள்ளது.
ஒரு நபர் லிப்ட் கேட்டு வந்தார். வழியில் கத்தியை முதுகில் வைத்து கண்மாய் கரைக்கு வண்டியை விட சொன்னார். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்கள் இரண்டு பேரும் அந்த இளைஞரும் சேர்ந்து மிரட்டி கண்மாய்க்கு உள்ளே அழைத்துச் சென்ற போது அங்கு ஒரு 3 பேர் இருந்தனர். மொத்தம் 6 பேர் சேர்ந்து இந்த தாக்குதல், வழிபறி செயலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு ஸ்டார்ட் செய்ய முயற்சித்தேன். அப்போது இளைஞர் ஒருவர் ஓடிவந்து, "எனது பேருந்தை தவறவிட்டுவிட்டேன். அதை பிடிக்க வேண்டும், கொஞ்சம் லிப்ட் கொடுங்கள்" என்றார்.
நானும் பார்ப்பதற்கு பாவமாக இருந்ததால் அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டேன். நடுவழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எனது முதுகிற்கு பின்னால் அந்த இளைஞர் கத்தியை வைத்து மிரட்டினார். உடனே என்னை அருகே உள்ள கண்மாய் கரைக்கு செல்லுமாறு மிரட்டினார். நானும் உயிருக்கு பயந்து அவர் சொன்னது போல் சென்றேன்.
அப்போது அங்கு மேலும் இரு இளைஞர்கள் வந்தனர். எனது வண்டியை நிறுத்திவிட்டு எனது டீசர்ட்டை பிடித்து இழுத்து உள்ளே அழைத்து சென்றார்கள். அங்கு இன்னும் ஒரு 3 பேர் இருந்தனர். மொத்தம் 6 பேர் சேர்ந்து என் கழுத்தில் இருந்த செயின், இடுப்பில் இருந்த அரைஞாண் கொடி, மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர்.
கொடூரத்தின் உச்சம்.. நெல்லை, தூத்துக்குடி செல்லும் நிவாரணப் பொருட்கள் வழிப்பறி! உடனே வந்த போலீஸ்
மேலும் எனது மொபைல் போனை பறித்த அந்த நபர்கள் எனது போனில் உள்ள போன் பே, ஜிபேயின் பாஸ்வேர்ட்டை கேட்டு அடித்தார்கள். நான் கொடுக்க மறுத்ததால் என்னை கடுமையாக அடித்துவிட்டு என் போனை மட்டும் பிடுங்கி கொண்டு சென்றனர். மேலும் என்னிடம் வண்டி சாவியை கொடுத்த அவர்கள், "திரும்பி பார்க்காமல் ஓடி போ" என்றார்கள்.
நான் அப்படியே கிளம்பி வந்துவிட்டேன். நான் அணிந்திருந்தது எல்லாமே வெள்ளி. 150 கிராம் மதிப்புடையதாக இருக்கும். அவர்கள் 6 பேரும் குடித்துவிட்டோ கஞ்சா போதையிலோ இல்லை, நன்றாக தெளிவாக இருந்தார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications