கொடுமை.. தாயை பாத்ரூமில் தங்க வைத்து.. படுக்க பாய், லைட் இல்லை.. குளிரில் நடுங்கி.. சுருண்டு.. பகீர்
Recommended Video
தூத்துக்குடி: எவ்வளவு துணிச்சலும், கீழ்த்தரமான புத்தியும் இருந்தால், தாயை இவ்வளவு நாள் பாத்ரூமில் தங்க வைத்திருப்பார்கள்? இப்படி கொடுமை இந்த தமிழகத்தின் மண்ணில் நடந்துள்ளது!
தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்த சேர்ந்தவர் நிகோலஸ்.. இவரது வளர்ப்பு தாய்தான் மரிய மிக்கேல்.. பெற்ற அம்மாவின் உடன்பிறந்த சகோதரி.. இவர்தான் நிகோலஸை வளர்த்தவர்.. 92 வயதாகிறது!
மரிய மிக்கேலை சரியாக நிகோலஸ் கவனிக்கவில்லை என்றும், அவரை கழிவறையில் தங்கவைத்து கொடுமைப்படுத்துவதாகவும் தகவல் வெளிவந்தது.

இருட்டறை
இதையடுத்து, மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போதுதான் அந்த பாத்ரூமில் மரிய மிக்கேல் இருப்பதை பார்த்தனர். அந்த கழிவறை வீட்டின் உள்ளேகூட இல்லை.. வெளியே இருக்கிறது.. இருட்டாக உள்ளது.. பாத்ரூம் உள்ளேயும், வெளியேயும் ஒரே குப்பை கூலங்கள் கொட்டி கிடக்கின்றன.

மரிய மிக்கேல்
கதவு இல்லை.. குளிரால் மரிய மிக்கேல் சுருங்கி.. நடுங்கி படுத்துகொண்டிருந்தார். கழிவறை பக்கெட்டும், மரிய மிக்கேல் சாப்பிடும் தட்டும் பக்கத்தில் பக்கத்திலேயே உள்ளன... மரிய மிக்கேல் படுக்க பாயும் இல்லை..வெறும் பாத்ரூம் தரையிலேயே அப்படியே படுத்து கிடந்தார். அந்த பாத்ரூமுக்கு லைட் கிடையாது.. இரவில் எப்படி தூங்குவார், எந்த பூச்சி, புழுக்கள் நுழைந்தாலும் தெரிய வாய்ப்பில்லை.

அதிர்ச்சி காட்சி
அப்படியே ஏதாவது கடித்தாலும் கத்தி கூப்பாடு போட்டு அழைக்கும் அளவுக்கு மரிய மிக்கேலுக்கு தெம்பு இல்லை.. மொத்த வாழ்வையும் தொலைத்துவிட்டதை அவரது கோலமே காட்டி கொடுத்தது.. இந்த குடும்பத்தில் இவருக்கு சாப்பாடு எப்படி போட்டு வந்தார்களோ தெரியாது! இந்த காட்சியை கண்டதும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவரை அங்கிருந்து மீட்டு கருணை இல்லத்தில் அனுமதித்துள்ளனர்.

வைரல் வீடியோ
பிறகு சமூக நலத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், மரிய மிக்கேலை சரியாக பராமரிக்காத நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!! இது சம்பந்தமாக அதிகாரிகள் சென்றபோது, இந்த கொடிய காட்சியை வீடியோ எடுத்துள்ளனர்.. அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது!
கண்ணதாசன் சொன்ன "நன்றிகெட்ட மனிதர்களைவிட நாய்கள் மேலடா" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது!
-
தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு.. தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொலை வழக்கில் 76 நாளில் தீர்ப்பு! -
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications