Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி- நெல்லை பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! பாலருவி எக்ஸ்பிரஸ் வந்ததும் இப்படி ஒரு முடிவா

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலானது பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த பேசஞ்சர் ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென் மாவட்டத்தில் மிக முக்கிய தொழில் நகரமாக தூத்துக்குடி உள்ளது. துறைமுகம், விமான நிலையம், தொழிற்சாலைகள் எனை அனைத்தும் நிரம்பியுள்ளதால் பல்வேறு தேவைகளுக்காக தூத்துக்குடிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தூத்துக்குடிக்கு அடுத்த படியாக திருநெல்வேலியும் மிக முக்கியமான நகரமாக உள்ளது.

Thoothukudi Railway Tirunelveli

இரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவு வெறும் 62 கிலோ மீட்டர் தான். மருத்துவ தேவை, கல்வி, தொழில் காரணங்கள் என பல்வேறு நோக்கத்திற்காக இரு நகரங்களுக்கு இடையேயும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். ஆனால், தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே போதிய ரயில் போக்குவரத்து வசதி இல்லை. தற்போது ஒரே ஒரு பேசஞ்சர் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 முதல் பாலக்காட்டில் இருந்து வரும் பாலருவி ரயிலும் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலக்காட்டில் பிற்பகல் 4.05 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு அதிகாலை 4.40 மணிக்கும், தூத்துக்குடிக்கு 6.40 மணிக்கு வந்து சேரும். பயணிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்துள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது ரயில்வே வெளியிட்டு இருக்கும் ஒரு அறிவிப்பு பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது, திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த பேசஞ்சர் ரயில் வரும் 19 ம் தேதி முதல் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு இரவு 9.20 மணிக்கு இந்த ரயில் வந்து சேரும். தாழையூத்து, கங்கை கொண்டான், வாஞ்சி மணியாச்சி, கைலாசபுரம், தட்டப்பாரை, மீளவிட்டான், தூத்துக்குடி மேலூர், வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்தது.

அதேபோல தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த நிலையில், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை எனக் கூறி ரயில்வே ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டு இருப்பது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் இயங்கும் வழித்தடத்தில் ரயிலின் நேரத்தை மாற்றி இயக்கினால் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும் என்பதால் ரத்து செய்வதை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+