திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை! போலீஸார் குவிப்பு? என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது திருச்செந்தூர் முருகன் கோயில். இது அறுபடை வீடுகளில் ஒன்று. சுமார் 2000-3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

Ban to take bath in Thiruchendur temple

தேவர்கள தொந்தரவு செய்த சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்ட போது அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவப்பெருமான தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார் என்பார்கள். அவர் சிவனின் கட்டளை ஏற்று சூரபத்மனை அழிக்க திருச்செந்தூர் வந்தார் என்கிறார்கள்.

இங்குள்ள கடலில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று கந்தர் சஷ்டி விரதம் முடிந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்கள் முருகனை தரிசித்து தங்களது விரதத்தை முடிப்பர். இந்த நிலையில் திருச்செந்தூர் கடலில் குளிக்க விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் இன்று பகல் 12.31 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 1,326 கி.மீ., தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் இலங்கையிலும் உணரப்பட்டது. இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

திருச்செந்தூர் முருகன் கோயில் மன்னார் வளைகுடாவுக்கு அருகில் இருப்பதால் அந்த கடலில் அலையின் சீற்றம் அதிகரிக்க வாய்ப்பு என்பதால் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கடலுக்கு செல்லும் பக்தர்களை போலீஸார் கண்காணித்தபடியே அவர்களை வெளியே அனுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+