தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆற்காடு வீராசாமி சொன்னாரே ஞாபகம் இருக்கா.. செந்தில்பாலாஜிக்கும் நடக்கும்.. திமுகவை கடுப்பாக்கிய மாஜி

ஆற்காடு வீராசாமியை உதாரணம் காட்டி செந்தில்பாலாஜியை விமர்சித்தார் கடம்பூர் ராஜு

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: திமுக ஆட்சி போனால் அதற்கு முழு காரணம் நான்தான் என்று ஆற்காடு வீராசாமி சொன்னதுபோல், சொல்லக்கூடிய சூழ்நிலை செந்தில் பாலாஜிக்கும் விரைவில் வரும் என்று மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து இன்றைய தினம் அதிமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று 2 நாட்களுக்கு முன்பு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருந்தார்.

அருகருகே 3 சூரியன்கள்.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்! அருகருகே 3 சூரியன்கள்.. விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் ஆச்சரியத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்!

 செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை பெரும் அளவில் திரண்டுள்ளனர்.. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரையில் அதிமுகவினர் 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு நேற்றே தொற்றி கொண்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி அளித்தார்.. அப்போது, செந்தில்பாலாஜியின் மின்கட்டண உயர்வு முதல் சசிகலாவின் அரசியல் வரை பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அதற்கு கடம்பூர் ராஜு அளித்த பதில்கள்தான் இவை: "தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு எகிறிவிட்டது.. மின்கட்டண உயர்வுடன் மின்வெட்டும் அதிகமாக உள்ளது.. சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா?

 ஆற்காடு வீராசாமி

ஆற்காடு வீராசாமி

மின்சார கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்... திமுக ஆட்சி போனால் அதற்கு முழு காரணம் நான்தான் என்று ஆற்காடு வீராசாமி சொன்னதுபோல், சொல்லக்கூடிய சூழ்நிலை செந்தில் பாலாஜிக்கும் விரைவில் வரும்... எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டர்கள் எப்படி ஆர்வமுடன் இணைந்தார்களோ, அதேபோன்ற எழுச்சியை இப்போது பார்க்க முடிகிறது... இதுதான் யதார்த்த நிலை.

 சாவியை தந்தார்கள்

சாவியை தந்தார்கள்

பொதுக்குழு உறுப்பினர்களின் 48 பேரை தவிர 2,532 பேர் ஒருமனதாக கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... இதைத்தான் நீதிமன்றமும் தீர்ப்பிலும் தெளிவாக கூறியுள்ளது... எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள ஆதரவை பார்த்து தான் அதிமுக தலைமை அலுவலக சாவியை நீதிமன்றமே ஒப்படைத்துள்ளது. வங்கிகளும், எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது... எங்களை குற்றம் சொன்ன சசிகலா போன்றோ, இப்போது காணாமல் போய் விட்டார்கள்... அதிமுக எம்பியை நீக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கருத்து சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் சசிகலா கருத்தும் உள்ளது.

Recommended Video

    EPS -ஐ தவிர்த்துவிட்டு OPS பக்கம் நிற்கப்போகிறாரா மோடி?
     தற்காப்பு

    தற்காப்பு

    பிரதமர் மோடி கூறியதால்தான் அதிமுகவில் இணைந்ததாக ஓபிஎஸ் சொன்னார்.. ஆனால், பிரதமர் மோடி இதுகுறித்து எந்த கருத்துமே கூறவில்லை.. தன்னை காத்து கொள்ள வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி கொள்கிறார்.. ஓபிஎஸ் தரப்பு அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர்... யார் உள்ளே சென்றார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். இதுதொடர்பாக புகார் தரப்பட்டுள்ளது.. காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கடம்பூர் ராஜூ.

    English summary
    big warning to senthil balaji and arcot veerasamy said the situation will soon come, slams kadambur raju ஆற்காடு வீராசாமியை உதாரணம் காட்டி செந்தில்பாலாஜியை விமர்சித்தார் கடம்பூர் ராஜு
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X