தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“மகாராஷ்டிரா” இங்கேயும் நடக்கலாம்! போகிற போக்கில் கிளப்பி விட்ட சசிகலா புஷ்பா! மிரட்டலா?

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : திமுக தொடர்ந்து மத்திய அரசு திட்டங்களை எதிர்த்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்தது நடக்கலாம் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

Recommended Video

    “மகாராஷ்டிரா” இங்கேயும் நடந்தது நடக்கலாம்! போகிற போக்கில் கிளப்பி விட்ட சசிகலா புஷ்பா - வீடியோ

    தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதியதாக தொடங்கப்படுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

    பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு புதிய விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.

    ஓபிஎஸ் vs எடப்பாடி vs சசிகலா.. மும்முனை தாக்குதலால் குலுங்கிய ஓபிஎஸ் vs எடப்பாடி vs சசிகலா.. மும்முனை தாக்குதலால் குலுங்கிய

    சசிகலா புஷ்பா பேட்டி

    சசிகலா புஷ்பா பேட்டி

    நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், :இளைஞர்களை வலுபடுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு மைதானங்கள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி திறக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    பாஜக அண்ணாமலை

    பாஜக அண்ணாமலை

    மத்திய அரசு திட்டங்களை தொடர்ந்து திமுக மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆகையினால் பிஜேபி தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார். ஆகையினால் எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கலாம்" என தெரிவித்தார்.

    முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

    முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மகாராஷ்டிராவில் ஆண்ட சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அணிதிரண்டு , முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதனையடுத்து பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுள்ளார்.

    திமுகவுக்கு மிரட்டல்?

    திமுகவுக்கு மிரட்டல்?

    இந்நிலையில் தான், திமுக தொடர்ந்து மத்திய அரசு திட்டங்களை எதிர்த்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்தது நடக்கலாம் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் இவரது கருத்துக்கு பலத்த கண்டனமும், எதிர்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

    English summary
    BJP state vice-president Sasikala Pushpa said that what happened in Maharashtra can happen anytime as DMK continues to oppose central government projects.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X